
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக பணியாற்றியது. தேர்தலுக்காக பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளர் வடமாநிலத்தை சேர்ந்தவரும் பிராமண வகுப்பை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்காக ரூ.350 கோடி கொடுத்து அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்களும் வெளியாகின.ஸ்டாலின் , மருமகன் சபரீசனின் விடா முயற்சியினால்தான் ஐபேக் டீம் திமுகவுக்காக இறங்கியது.
பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் அமைத்துக் கொடுத்த வியூகங்களின் அடிப்படையில்தான் திமுக இந்த தேர்தலை எதிர்கொண்டது. திமுகவினரின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், புகார் மனுக்கள் பெறுவது உள்ளிட்ட திமுகவின் பிரசாரத் திட்டங்கள் அனைத்தும் பி.கே.வின் ஐபேக் டீமால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டதுதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து ஆட்சி பொறுப்புக்கு வந்தது திமுக.
இந்தநிலையில் தான் 2026 தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மீண்டும் ஐபேக் நிறுவனத்துடன் மாப்பிள்ளை சபரீசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த முறை திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் வெல்வது கஷ்டம் என ஓப்பனாகவே கூறிவிட்டார். இதனால் மாற்று பிளான் செய்துள்ளது திமுகபுதிய வரவை இறக்கி ஓட்டுக்களை பிரிப்பது. இதனை தொடர்ந்து பிகேவின் நண்பர் ஆதவ் அர்ஜுனா விசிகவிலிருந்து பிகே வெளியேறியது விஜயை சந்திப்பது என தமிழக ஊடகங்களில் விஜயின் அரசியல் பயணத்தை தலைப்பு செய்தி ஆக்குவது அதிமுக கூட்டணி குறித்து பேசுவது என தமிழக அரசியல் களம் மாறியது.
திமுக செய்யும் தவறுகள் முற்றிலுமாக மறைக்கப்பட்டது. இதற்கு தான் விஜய் எனும் ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறது திமுக. இந்த நிலையில் முக்கிய செய்தி உண்ரடு வெளியாகி உள்ளது.
''தமிழகம், தெலுங்கானாவில் உள்ள மதுபான ஆலையில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு பணம் வருகிறது'' என பா.ஜ எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறி இருப்பது தான் தற்போது பரபரப்பு செய்தி ஆகும். .இது குறித்து பீஹார் பாஜ எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பாஜவின் ஓட்டுக்களை குறைக்க, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் உடன் இணைந்து சதி வேலை செய்கிறார். தமிழகம், தெலுங்கானாவில் உள்ள மதுபான ஆலையில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு பணம் வருகிறது.
பொய்கள், ஏமாற்றுதல் மற்றும் மோசடி மூலம் தனது கட்சியைத் தொடங்கிய அவர் எவ்வளவு பெரிய மோசடி செய்பவர் என்று சிந்திக்க வேண்டும். ஜன் சுராஜ் கட்சியின் சட்டவிரோத நிதி மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடத்தினால் சிக்கி கொள்வார்கள். அவர் தப்பிப்பதற்கு, பிகே உதய் சிங் என்ற பப்பு சிங் மற்றும் மனோஜ் பாரதியை கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களாக ஆக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பெரும்பாலான மதுபான ஆலைகள் யார் கையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே இந்த நிலையில் விஜய்,பிகே,திமுக கூட்டணி என்பது தெளிவாக தெரிந்துள்ளது. ஏற்கனவே மதுபானஊழலால் தெலுங்கானா அரசு கவிழந்துள்ளது. தமிழகத்திலும் விரைவில் மதுபான ஊழல் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி தகவல்கள் கூறியுள்ளதால். விஜய் பிகே திமுக கூட்டணி கூண்டோடு உள்ளே செல்லும்.