இது வேறலெவல் ருத்ரதாண்டவம் தடுத்த காவல்துறை சிங்கப்பெண்ணாக மாறிய ஆஷாநாத் என்ன நடந்தது?ashanath kerala
ashanath kerala

கேரளாவில் பிணராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது, இங்கு நடைபெற்ற தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவியது, காங்கிரஸ் வேட்பாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் பாஜகவை வீழ்த்தி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மேயராக வெற்றி பெற்றார்.

100 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணி 51 இடங்களிலும், பாஜக கூட்டணி 34 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கட்டுமான பணிகளில் பல்வேறு முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தவேண்டும் என பாஜக கவுன்சிலர்கள் மேயரிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால் பாஜகவினருக்கு பதில் அளிக்காமல் பாதியிலேயே மேயர் மற்றும் அவரது கட்சி கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர், இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தியது பாஜக, மேயர் மன்றத்திலே உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர், இதையடுத்து போராட்டம் மிகுந்த அதிர்வலைகளை உண்டாக்கியது, ஊடகங்களும் முக்கிய செய்தியாக வெளியிட ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கியது.

ஒரு கட்டத்தில் பாஜக கவுன்சிலர் ஆஷா நாத் தலைமையில் பாஜகவினர் போராட்டம் தொடங்க மாநிலத்தின் தலைநகர் ஸ்தம்பிக்கும் சூழல் உண்டானது இதையடுத்து போரட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர், ஆனால் அதனையும் கண்டு அச்சம் கொள்ளாமல் களத்தில் இறங்கி ஊர்வலம் நடத்தியது ஆஷா நாத் தலைமையிலான பாஜக குழு.

ஆதரவு பெறுக இளைஞர்களும் கைகோர்த்தனர், இந்த கட்டத்தில் காவல்துறை தடுக்க நினைத்து ஆஷா நாத் மற்றும் பாஜக கவுன்சிலர்கள் அவருடன் வந்த பொதுமக்களை கட்டாயமாக தடுக்க முயன்றனர் அப்போது போலீசார் எதிர்ப்பையும் மீறி அவர்கள் முன்னேறி சென்ற காட்சி நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்தியாவில் தென் மாநிலங்களில் இளைஞர்கள் அதிக அளவில் பாஜக நோக்கி செல்வதற்கு இதுவும் ஒரு சாட்சி எனவும், உண்மையான சிங்க பெண் இவர்தான் என ஆஷாநாத்தை அவரது கட்சியினரும், இதர பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.கேரளாவில் எது நடந்தாலும் வெளியிடும் தமிழக ஊடகங்கள் கேரள தலைநகரில் நடந்த இந்த விவகாரம் குறித்து இது வரை வாய் திறக்கவில்லை. (தமிழில் முதலில் சொல்வது உங்கள் TNNEWS24 மட்டுமே ) புகைப்படங்களை பார்க்க கீழே கிளிக் செய்யவும் 

Share at :

Recent posts

View all posts

Reach out