India

அடிதூள்... மாதம் ரூ.4 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி கிடைக்கும் சேமிப்பு திட்டம் பற்றித் தெரியுமா?

Money saving
Money saving

கமலின் பஞ்சதந்திரம் படத்தில் வரும் டைலாக்கைப் போல் ’சின்ன கல்லு பெத்த லாபம்’ என்பதை நிஜமாக மாற்றும் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் உள்ளன. அதனால் தான் நமது முன்னோர்கள் கூட ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என சேமிப்பு பற்றித் தெரிவித்துள்ளனர். மக்களைப் பொறுத்தவரை தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானவையாகவும், சிறிய முதலீடுகளுக்கு அதிக வருமானம் தரக்கூடியவையாகவும் உள்ளது. அந்த வகையில் மாதம் ரூ.4 ஆயிரம் டெபாசிட் செய்து வந்தால் ரூ.1 கோடிக்கு மேல் லாபம் தரக்கூடிய சேமிப்பு திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்... 


தனியார் துறை ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கை முறைக்கு கணிசமான தொகையைச் சேமிப்பது என்பது பெரும் சவாலான காரியமாகும். அதுவும் தற்போது உலக அளவில் நீடித்து வரும் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், பணி நீக்க நடவடிக்கைகள் தனியார் ஊழியர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த சமயத்தில் நீண்ட கால வருவாய் தரக்கூடிய ஆபத்தில்லாத முதலீட்டு திட்டங்கள் மீது முதலீடு செய்வது அவசியமாகும். 

சந்தாதாரர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை சேமித்து தனது ஓய்வு காலத்தில் கணிசமான தொகையைப் பெற லையான வைப்புத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஆகிய திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 

NPS திட்டம் என்றால் என்ன? NPS என்பது ஒரு தன்னார்வ ஓய்வு சேமிப்புத் திட்டமாகும். ஒவ்வொரு இந்தியருக்கும் போதுமான ஓய்வூதிய வருமானத்தை வழங்குவதற்கான பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வைக் காணும் முயற்சி இது.

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமைக் காலத்தில் பயன்பெறும் நோக்குடன் இந்திய அரசால் தேசிய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

ரூ.1 கோடி பெறுவது எப்படி? நீங்கள் ஒரு தனியார் துறை ஊழியராக இருந்தால், உங்களால் முடிந்தவரை முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ரூ. 26 வயதான நபர் என்றால், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் 4,000 ரூபாயயை டெபாசிட் செய்து வர வேண்டும். நீங்கள் 60 வயது வரை தொடர்ந்து டெபாசிட் செய்து வந்தால்,  மாதம் நீங்கள் 35 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும்.  இந்த கணக்கீடு 11% வட்டி விகிதத்துடன் செயல்படுத்தப்படுகிறது. 

இதன் விளைவாக, நீங்கள் 26 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயதாகும் போது உங்களின் மொத்த முதலீடு ரூ.16,32,000 ஆக இருக்கும். இந்த கட்டத்தில் உங்கள் மொத்த கார்ப்பஸ் ரூ.1,77,84,886 ஆக இருக்கும். இதன் மூலம் நீங்கள் 61 வயதை எட்டியப் பிறகு மாதம் ரூ.35 ஆயிரத்தை ஓய்வூதியமாகவோ அல்லது ரூ. 1 கோடியை ஒன்டைம் செட்டில்மெண்ட்டாகவோ பெறலாம்.

- annakizhi