Tamilnadu

அமைச்சர் முன்னிலையில் வெளியான வீடியோ வாயே திறக்காத திருமா ..சுபவீ.. செந்திலை விளாசி எடுத்த இராம.ரவிக்குமார்..

rama ravikumar
rama ravikumar

குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் தன்னை தலித் என்பதால் புறக்கணிப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில்  வேதனை வெளியிட்ட காட்சிகள் பார்ப்போர் மனதை கலங்கடிக்க செய்கின்றன.


இலங்கை முகாம் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நிவாரணம் வழங்கினார் அப்போது முகாம் பெண் ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெயரை வாசித்தார், அப்போது அமைச்சர், ஒன்றிய செயலாளர்கள் இன்னும் பல கிளை கழக நிர்வாகிகள் பெயர் கூட வாசிக்கப்பட்டது ஆனால் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் பெயர் இடம்பெறவில்லை.

இதை கேள்வி எழுப்பினார் அமலு அதற்கு பெயர் பட்டியலை வாசித்த முகாம் பெண் எழுதி கொடுத்ததை தான் நான் வாசித்தேன் என கூறினார், அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அமலு அளித்த பதில் வேதனையாக இருந்தது, நான் உன்னை சொல்லவில்லைமா நீயே நாட்டை விட்டு வந்து அகதியா இருக்க நான் இங்க இருந்தும் அகதியா இருக்கேன் என சொல்லியதாக தனியார் பத்திரிகையான நக்கீரன் வீடியோவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரிதாக ஊடகங்களில் முன்னிலை படாத நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் இராம ரவிக்குமார் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு :

நரிக்குறவர் அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டு சமூக நீதியை நிலைநாட்டிய சேகர்பாபு, பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்கி ஆதார் கார்டு வங்கி கடன் ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக முதல்வர்.இப்படி ஊடகங்களில் சமூக நீதி காவலர்களாக காட்டிக் கொள்ளும் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவருடைய கண்ணில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அம்முலு விஜயன்தலித் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன்

என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் பேசிய இந்த வீடியோ இதுவரை படாதது ஆச்சரியமாக இருக்கிறது.சிறுத்தை திருமாவளவன் அவர்கள் இதற்கு ஒரு கண்டனம் தெரிவித்தாரா? விடிந்தால் அறிக்கை விடும் கி வீரமணி எந்த அறிக்கையும் விடாதது ஆச்சரியமாக இருக்கிறது. சுபவீரபாண்டியன் சும்மா இருப்பதன் மர்மம் என்ன? அறம் புறமென்றும் பேசும் செந்தில் வீடியோ போடாதது ஏன்? உங்கள் அனைவரின் வாயிலும்  "பெவிகுயிக்" ஒட்டப்பட்டு இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

தலித் சமுதாயத்தைச் சார்ந்த எம்எல்ஏ என்கிற காரணத்தால் புறக்கணிக்கிறார் என்றால் புறக்கணித்த நபர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன?உடனடியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தன் முனைப்பாக இந்த விஷயத்தை கையில் எடுக்க வேண்டும் விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்த கட்டத்திற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரை எடுத்து செல்ல படலாம் என்பதால் முரசொலி பஞ்சமி நிலம் சர்ச்சை போல் இப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் அமலு தெரிவித்த கருத்துக்கள் திமுகவிற்கு அடுத்த குடைச்சலை கொடுத்துள்ளது. ஆமாம் இந்த திருமாவளவன் இந்த சம்பவம் குறித்து வாயே திறக்காதது ஏன்?