சார் பிடிபட்டது ஷாருக்கான் மகன் என வந்த போன் கால் அமிட்ஷா கொடுத்த பதிலால் ஆடி போன அதிகாரிகள்!!sharuk and amitshah
sharuk and amitshah

மும்பையில் நடுக்கடலில் நேற்று நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர்.அங்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸார் பயணிகள் போல அதே கப்பலில் ஏறினர். மும்பையில் இருந்து கிளம்பி கப்பல் கடலுக்குள் பயணித்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர்.அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அங்கு காணப்பட்டார், முதலில் கைது செய்ய காவலர்கள் அங்கு சென்ற போது அந்த இளைஞன் தான் யார் என்று தெரியாதா என் மீது எப்படி கைது நடவடிக்கையில் ஈடுபடலாம் என கேட்டதாகவும்,

யார் நீ என அதிகாரிகள் கேட்ட போது தான் ஷாருக்கான் மகன் என அந்த இளைஞன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.உடனே கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க விஷயம் உள்துறை அமைச்சகம் வரை சென்றுள்ளது, அடுத்த காலில் நேரடியாக வந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமிட்ஸா அப்போது அதிகாரிகள் இடம் தப்பு செய்தவன் யாராக இருந்தாலும் சட்ட படி நடவடிக்கை எடுங்கள் அதற்கு 100% நான் உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றேன்.

எவனை பற்றியும் கவலை பட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார் இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷாருக்கான் மகனை கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக   ஷாருக் கானின் மகன் ஆரியன் உள்ளிட்டோர் மும்பை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வாங்கி ஆய்வு செய்தனர். ஆரியன் யார் யாருடன் பேசினார், என்பது பற்றி விசாரித்தனர். பின்னர் ஆரிய கான், அர்பாஸ் சேத் வணிகர் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை மும்பையில் பிரபலங்கள் மகன்கள் கைது செய்யப்படுவது அரிது அதிக இடங்களில் பிடிப்பட்டாலும் அவர்கள் எளிதில் தப்பித்து விடுவர் ஆனால் தற்போது மட்டுமே அவர்களின் போதை பழக்கம் வீதிக்கு வந்துள்ளது. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த தரமான பதிலால் நேர்மையான அதிகாரிகளை தவிர மற்றவர்கள் ஆடி போயுள்ளனர்.

Share at :

Recent posts

View all posts

Reach out