
2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளைகளில் இறங்கி விட்டார்கள். ஒருபக்கம் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது திமுகவுக்கு சற்று நிம்மதியை கெடுத்துள்ளது. விடுதலைசிறுத்தைகள் இருக்கும் ஏரியாக்களில் விஜயின் கொடி பறக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் பொதுமக்களை சந்திக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார். இதனால் அவரை எதிர்க்கட்சிகள் வொர்க் பிரம் ஹோம் பாலிடிக்ஸை விட்டு வெளியே வர வேண்டும். பொதுமக்களை சந்திக்க வேண்டும் என்றனர்.
வெள்ளத்தால் பாதித்த மக்களையும், தூய்மை பணியாளர்கள் போராட்டக் குழுவினரையும் தன் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்தார் விஜய். இதுவும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில் விஜய்யின் சுற்றுப்பயண அட்டவணையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அவர் பிரச்சாரம் செய்வது போன்ற அமைக்கப்பட்டுள்ளது. இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் வீக் என்ட் பாலிடிக்ஸ் என்கிறார்கள் மேலும் விடுதலை சிறுத்தை நிர்வாகிகளால் திமுகவுக்கு அதிக அளவில் கெட்ட பெயர் வருகிறது என மாப்பிளைப் சபரீசனிடம் ரிப்போர்ட் செய்துள்ளார்கள். வரும் தேர்தலில் இது எதிரொலிக்கும் ஒழுங்காக விடுதலை சிறுத்தைகளை அடக்க விட்டால் திமுக ஆட்சிக்கே ஆபத்து என ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் விஜய் மற்றும் திருமாவுக்கு மாற்று ஏற்பாடாக சீமானை உள்ளே இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது திமுக.
இதற்கிடையே மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்துவின் மறைவைக் காரணமாக வைத்து, கடந்த மாதம்தான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருந்தார் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான். அந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று சொல்லப்பட்டாலும், மறைமுக அரசியல் நட்பு வலுவாக உருவானது. அதன் பிறகு, சீமானின் அரசியலில் சில மாற்றங்களைக் கண்கூடாகவும் நம்மால் பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ச்சியாகச் செய்வதா... வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கத்தான் சமீபத்தில் முதல்வரின் மருமகனான சபரீசனை ரகசியமாக சந்தித்துப் பேசியிருக்கிறாராம் சீமான். இந்த சந்திப்பின்போது, தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு சில டீலிங் புள்ளிகளை மட்டுமே அழைத்துச் சென்று, மணிக்கணக்கில் ஆலோசனை செய்திருக்கிறார்.”
2026 சட்டமன்றத் தேர்தலில் நான்குமுனைப் போட்டி உருவாகியிருப்பதால், அதில் நா.த.க-வின் வாக்குவங்கி சரியும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை வாக்கு சதவிகிதம் குறைந்துவிட்டால், நா.த.க-வின் எதிர்காலம் பெரிய அளவில் கேள்விக்குறியாகிவிடும். எனவே, வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் சீமான், இந்த முறை சில எம்.எல்.ஏ-க்களுடன் கோட்டைக்குச் சென்றுவிட வேண்டும் என்றும் திட்டமிடுகிறார். குறைந்தது, தான் மட்டுமாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் அவர் இருப்பதால், சில டீலிங்கு களுக்குத் தயாராகி, எதிர் முகாமில் இருப்பவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த முறை தனது வெற்றியை உறுதி செய்ய, ஒவ்வொரு கட்சித் தலைமையிடமும் பேசிவருகிறார். அந்த வகையில், சபரீசனுடனான இந்தச் சந்திப்பில், தனது வருங்காலத் திட்டம் குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறாராம். இரு தரப்பிலும் சில அட்ஜஸ்ட்மென்ட்டுகள், சில காம்ப்ரமைஸுகள் செய்ய உடன்பாடாகி யிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்
அதிமுக கூட்டணிக்கு வர வேண்டுமென எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன. கூட்டணி குறித்து பொறுத்திருங்கள் எனவும், கூட்டணி குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.