24 special

உலகமே எதிர்பாரா அதிரடி திருப்பம்! இந்தியாவிடம் மண்டியிட்ட அமெரிக்கா! வர்த்தக போருக்கு எண்டு கார்டு!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்காவிற்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது என்று குற்றம்சாட்டி வந்த அதிபர் டிரம்ப், ஒருகட்டத்தில் அதிக வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவுக்கு எதிராக கூடுதல் 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி மிரட்டலை கண்டுகொள்ளாத இந்தியா, ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.அதுவும் அதிகமாக செய்து வருகிறது 


இதனால், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் முன்வைத்து வருகிறது. ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தனது செயலை நியாயப்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் இந்தியா- அமெரிக்கா வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசும், அமெரிக்கா அதிகாரிகளுடன் இதுபற்றி பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகி வருகிறது. பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் விரைவில் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது: இருநாடுகளுக்கு இடையேயன வார்த்தக விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேசுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி ,

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள். இந்தியா - அமெரிக்க உறவின் வரம்பற்ற திறனைத் வளர்ப்பதற்கு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.இந்த பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அதிபர் டிரம்ப்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்தது மட்டுமின்றி, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரையில் இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் டிரம்ப் கூறினார். இதனையயடுத்து, ரஷியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முக்கியமாக எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் - ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் ஒன்றாக இருந்தனர். இவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. இவர்கள் ஒன்றாக உள்ள புகைப்படம் அமெரிக்க அரசியலை உலுக்கி உள்ளது. உலக அரசியலின் அடுத்த கட்டமாக இதுபார்க்கப்பட்டது 

இது குறித்து எக்ஸ் தளத்தில்  முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், "வெள்ளை மாளிகை அமெரிக்க-இந்தியா உறவுகளை பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டது. மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தூண்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் விதித்த வரிகள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நாடுகள் இவ்வளவு காலம் மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகளை தகர்த்துவிட்டதாக போல்டன் சாடினார்.

இந்த நிலையில்தான், இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.