24 special

வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதா விசிக விஷயத்தில் களமிறங்கிய சிறப்பு குழு! ஸ்ரீதர் வேம்பு விஷயத்தில் சிக்கிய திருமா

THIRUMAVALAVAN,SRIDHARVEMBU
THIRUMAVALAVAN,SRIDHARVEMBU

திருமாவளவன் விஷயம் பூதகரமாகி உள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதன் ரிப்போர்ட் மோடியின் டேபிளுக்கு சென்றுள்ளதாம், அதன் அடிப்படையில் தமிழகத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து மோடியிடம் ஆலோசனையும்  நடைபெற்றுள்ளதாம். மேலும்  பாதுகாப்பு விஷயத்தில் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என மோடி கூறிவிட்டார். மேலும் தமிழகத்தில் யாரெல்லாம் வெளிநாட்டு பணம் பெற்று இந்தியாவிற்கு எதிராக பேசிவருபவர்களை தட்டி தூக்க ரகசிய உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். மோடியின் கோவத்திற்கு விசிக தான் காரணமாம். 


அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது. அதாவது, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பல பொருட்களுக்கு இந்த வரியை விதித்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் முன்னதாக இந்தியா மீது 25% வரி விதித்திருந்தது. ஆனால், ஆகஸ்ட் 6ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்குக் கூடுதலாக 25% வரி அறிவிக்கப்பட்டது. 

அமெரிக்க வரிகளின் தாக்கத்தை ஒரு புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா, பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.  உலக சந்தையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் திட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் சுதேசி பொருள்களுக்கு முன்னுரிமை அளித்துவருகிறது. அதன் பலனாகச் செப்டம்பர் 2025-ல் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 6.7 சதவீதம் உயர்ந்தது. 

பிரதமர் நரேந்திர மோடியும் பதவியேற்றதில் இருந்தே டிஜிட்டல் புரட்சியில் அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் சாதனங்களையே பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார்.

முதலாவதாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டு என்ற அந்நிய நாட்டு கார்டுகளுக்கு பதிலாக ரூபே என்ற இந்தியாவின் சுயசார்பு கார்டை அறிமுகப்படுத்தி சுதேசி இயக்கத்துக்கு வலு சேர்த்தார். இன்று உலகின் பல நாடுகளில் இந்திய கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதன்பிறகு நாம் பயன்படுத்தும் பணப்பரிமாற்றத்துக்கான யு.பி.ஐ. சேவை உலகுக்கே முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. அடுத்ததாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் மெயில் மற்றும் வாட்ஸ் அப், பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் போன்ற வெளிநாட்டு சமூக ஊடகங்களுக்கு பதிலாக சுதேசி செயலிகளை பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தைமுன்வைத்தார்.

இதற்கிடையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும்அமைச்சர்கள்  தமிழ்நாட்டு நிறுவனமான ஸ்ரீதர் வேம்புவின் ஜோகோ மெயிலை பயன்படுத்த தொடங்கிவிட்டோம் என்று அறிவித்தனர். இது கூகுள் மெயிலுக்கு மாற்றான மெயில் சேவையாகும். . ‘உள்நாட்டு டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களை உருவாக்கும் நிலையை ஊக்குவிக்கவேண்டும். அரசின் மொத்த தகவல் பரிமாற்றங்களும் சுதேசி தளங்கள் மூலமே பரிமாறிக்கொள்வதை உறுதி செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நிலைமை இப்படி இருக்கையில் அரட்டை செயலி குறித்தும் அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குறித்து விசிகவினர் அவதூறாக பேசியது குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு ஒன்று இறங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் எதாவது செய்துவிட முடியாதா என வெளிநாட்டு சக்திகள் காத்து கிடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் சுதேசி பொருட்களை ஊக்குவித்து வரும் நிலையில்  சுதேசி செயலியை  சாதி ரீதியாக பேசி தமிழ்கத்தில் மடைமாற்றம் செயலில் விசிக இறங்கியுள்ளதா  என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளது . வெளிநாடுகளிடமிருந்து எதாவது பணம் வருகிறதா திருமா மற்றும் உறவினர்கள்  சொத்துக்கள் குறித்தும்  விசாரணை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது