24 special

மின்துறையில் 20 ஆயிரம் கோடி..... நாடி நரம்பு ரத்தம் ஊறிப்போன ஊ*ல்.. தியாகி செந்தில் பாலாஜியின் அடுத்த கேம்

MKSTALIN,SENTHILBALAJI
MKSTALIN,SENTHILBALAJI

அடுத்த ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டனர் தமிழக மக்கள்.ஏனென்றால் ஊழல் இல்லாத துறைகளே இல்லை என்ற அளவுக்கு திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது.பல அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடைபெற்று வருவதனால் நிர்வாகத்தையும் சரியாக கவனிக்க முடியமால் திணறி வருகிறது தமிழக அரசு. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் வெற்று விளம்பரங்களை மட்டுமே நம்பி ஆட்சி செய்து வருகிறது. லஞ்ச வழக்கில் சிறைக்கு சென்று வந்தவரை தியாகி பட்டம் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜி நிர்வகித்த இரு துறைகளும் ஊழலால் சிக்கி தவித்து வருகிறது. பாட்டீலுக்கு 10 ருபாய் என பாட்டு பாடும் அளவிற்கு ஊழல் நிறைந்துள்ளது. அதனை தொடர்ந்து மின்சார துறை இதுவும் ஊழல் நிறைந்ததுதான் காணப்படுகிறது. 


மின்சாரத்துறை முறைகேடு சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது , மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு ஊழல் தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன

இதற்கிடையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய ஒரு டெண்டருக்கு ஒப்புதல் அளிக்க முடியாமல் முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறதாம் திமுக தலைமை. அந்த  டெண்டர் மின்வாரியம் சம்பந்தப்பட்டது.  தியாகி செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை  இழந்ததில் இருந்தே மின்சாரத்துறை சம்பந்தமான எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என புலம்புகிறார்கள். அறிவாலயத்தின்  உள்விவகாரங்களை அறிந்தவர்கள். தமிழகத்தில் சுமார் 3 கோடியே 4 லட்சம்  ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் திட்டம்  சுமார் 20ஆயிரம்  கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. 

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி அதை 93 மாதங்களுக்கு பராமரிக்கும் பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய இந்த ஆண்டு மார்ச்சில் 

மின்வாரியம் டெண்டர் கூறியது. ஆறு தொகுப்புகளுக்கும் சேர்த்து 50  நிறுவனங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு  நிறுவனமும் தொழில்நுட்ப புள்ளி விலை 

புள்ளி என இரு ஆவரங்களை சமர்ப்பித்தன.  தொழில்நுட்ப ஆவரங்களை சரிபார்க்கும் பணியை  அதிகாரிகள் முடித்துள்ளதாக  சொல்லப்படுகிறது. ஆனால் விலை புள்ளியை  திறக்க இன்னும் அனுமதி கிடைக்காததால்  ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை  செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தியாகி செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பை இழந்ததில் இருந்தே  கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.பொறுப்பு அமைச்சர் என சிவசங்கர்  நியமிக்கப்பட்டாலும் செந்தில் பாலாஜியின்  தலையீடு இருப்பதால் அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை அறிவாலய அறிவார்ந்தவர்கள்

மேலும் 20ஆயிரம் கோடி  ரூபாய் ஒப்பந்தம் என்பதால் தலைமை குடும்ப மாப்பிள்ளை தலையீடும் இருப்பதால் இழுபறி  நீடிக்கிறது என்கிறார்கள். தேர்தல்  நேரத்தில்  மாதம்  ஒருமுறை மின்கட்டணம் என வாக்குறுதி  கொடுத்த ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளாக அதை  செய்யவே இல்லை. மேலும் மின்கட்டணம் உயர்ந்த்தே தவிர வேறு எதுவும் செய்யவில்லை இந்த திராவிட மாடல் அரசு. 20 ஆயிரம் கோடி இதில் எவ்வளவு காசு பார்க்க போகிறார்களோ  கோபாலபுர குடும்பம். மேலும் ஸ்மார்ட் மீட்டர் ட்டர்  பொருத்துவோம் பொருத்துவோம் என சொல்லியே அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டார். இப்போது பணியை தொடங்கினாலும் கூட 2028க்குள் பணி  முடியாது. ஆக ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி பொய் வாக்குறுதியாக போலி வாக்குறுதியாகவே முடிந்துவிட்டது.