
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தது ஒரு சாதாரண சர்வதேச கூட்டத்தில் பங்கேற்பாக இருக்கலாம் என்று பலர் நினைத்திருந்தனர். ஆனால் அந்த விசிட் இந்தியாவின் .ராஜதந்திர மாஸ்டர்ஸ்ட்ரோக்.” இந்தியா உலக மேடையில் எப்படிப் பேச வேண்டும், எவ்வளவு துல்லியமாக உறவுகளை வடிவமைக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடி செயலில் காட்டிவிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா–கனடா உறவு பதட்டத்துடனும் இருந்தது. குறிப்பாக 2023-இல்தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து கனடா இந்தியா மீது குற்றம் சாட்டியது. இதனால் உறவு முற்றிலும் சிதிலமாகி விடும் நிலைமை உருவானது. இந்தநிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி நடத்திய நேரடி சந்திப்பு உலக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்த சந்திப்பிலேயே பிரதமர் மோடி, 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை முன்வைத்தார். இது தற்போது உள்ள வர்த்தகத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
அமெரிக்காவுடனான வரி பிரச்சினைகளால் கனடா பொருளாதார சுமையில் தள்ளாடி வரும் சூழலில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் பெரிய சந்தையுடன் மீண்டும் நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அந்நாடு உணர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவும் எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், மாற்று நட்பு நாடுகளுடன் பொருளாதார பாலங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியா–கனடா உறவை மீண்டும் எழுப்பி நிறுத்தியிருப்பது, மோடியின் நேர்த்தியான, நிலையாக கணக்கிடப்பட்ட ஊடுருவும் டிப்ளமஸியின் நேரடி விளைவு என்று நிபுணர்கள் மதிக்கின்றனர்.
இந்த விசிட்டில் கனடா மட்டுமல்ல அல்ல, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற முக்கிய உலகத் தலைவர்களுடனும் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகுந்த கவனத்தை ஈர்த்தன. பாதுகாப்பு, விண்வெளி, தொழில்நுட்ப, எரிசக்தி போன்ற எதிர்காலத்தைக் குறிவைக்கும் துறைகளில் பல புதிய ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து தெளிவான முன்னேற்றங்கள் எட்டப்பட்டதாக அரசு தரப்புகள் தகவல் வழங்குகின்றன. குறைந்த நேரத்தில் அதிக பலனை எடுக்க வேண்டும் என்ற நோக்கில், எவ்வாறு ஒரு சர்வதேச வாய்ப்பை இந்தியாவுக்கான லாபமாக மாற்ற வேண்டும் என்கிற முறைப்படியே பிரதமர் செயல்பட்ட விதம், அரசியல் வட்டாரங்களில் வியப்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் அடுத்த பத்தாண்டு வளர்ச்சியை கண்முன்னே வைத்து ஒவ்வொரு தரப்புடனும் மோடி நடத்திய பேச்சுவார்த்தைகள், சாதாரண சந்திப்போ, மரியாதை அழைப்போ அல்ல. இந்தியாவை உலக பொருளாதார மையத்துக்கு கொண்டு வர வேண்டிய அடுத்த கட்டத்தை அமைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்க வந்த பிற உலகத் தலைவர்கள் பலரும், மோடி ஒரே பயணத்தில் பல நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திய திறமைக்கு பாராட்டுத் தெரிவித்தனர் என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டன.இந்த விசிட் முடிவை ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால், “ஜி20-க்காக போன பிரதமர்… ஆனால் போருக்கு போனது போல பல முக்கிய பிரச்சினைகளை ஒரே விசிட்டில் தீர்த்து வைத்து வந்தார்” என்று அரசியல் நிபுணர்கள் பாராட்ட தொடங்கியுள்ளார்கள்.
இறுதியாக சொல்ல வேண்டியது ஒன்று தான் இந்த விசிட்டிங் மூலம் மூலம், “ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்தார்” என்ற பழமொழியை பிரதமர் மோடி நேரடியாக செயலாகக் காட்டி விட்டார்.
