
இன்றைய உலக அரசியல் மேடையில் ஒரு புதுச்சூழல் சூழ்ந்துள்ளது மிகப் பெரிய மாற்றத்தின் முழக்கமாக இந்தியாவின் பெயர் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தானை தன் கைகளில் வைத்துப் பயன்படுத்திய அமெரிக்கா… இப்போது அந்த கையை மெதுவாகவே விலக்கி கொண்டிருப்பது போல ஒரு மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. சீனாவின் பிடியில் முழுக்க சிக்கிக்கொண்ட பாகிஸ்தானை மீண்டும் பழைய அமெரிக்கா கைக்குள் கொண்டு வர முடியாது… என்பதை உணர்ந்துவிட்டதாக உலக வட்டாரங்கள் சொல்லத்தொடங்கியுள்ளன.
இந்த நிலைக்கு மிகப் பெரிய அடையாளம் — அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியுள்ள ஜாவலின் எனும் டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகள். சாதாரண ஆயுதம் இல்லை… ராஜஸ்தான் – குஜராத் எல்லையை நோக்கி நகரும் எந்த பாகிஸ்தான் டாங்கும் இந்தியா எல்லையை நெருங்க முடியாது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. மேலும் இந்தியா இல்லாமல் எதுவம் நடக்காது என்பதை ஜி.20 மாநாடு உணர்த்தியுள்ளது. கனடாவை கைக்குள் போட நினைத்த டிரம்ப்க்கு அதிர்ச்சியை அளித்தது இந்தியா. தடையற்ற வர்த்தகம் குறித்து பேச தொடங்கி உள்ளது.
மேலும் இந்தியாவின் உற்ற நண்பன் ஆர்மபித்த உக்ரைன் போரில் அமெரிக்க ரஸ்யா பக்கம் சாய்ந்துள்ளது ரஷ்யாவுக்குசாதகமாக விஷயங்களை போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது .உக்ரைன் நேட்டோவில் சேரவே கூடாது, ரஷ்யாவுக்கு எதிராக எல்லையை தள்ளிச் செல்லக்கூடாது… இதுதான் ரஷ்யா போரை ஆரம்பித்த காரணமாதலால், இதுவே போர் ஒப்பந்தத்தில் கூறியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து இந்தியா—ரஷ்ய எண்ணெய் மீதான வரி, தடை, அனைத்தும் குறைய உள்ளது.. இந்தியாவின் ஏற்றுமதி வழக்கம் போல தொடரும். உலக மேடையில் அமெரிக்கா, ரஷ்யா, அரபு நாடுகள், அனைத்தும் இந்தியாவைச் சுற்றி தங்கள் பயணத்தை திட்டமிடுகின்றன. ஒரு காலத்தில் இந்தியா அமெரிக்காவை நோக்கிப் பாய்ந்து ஓடியது… இன்று சூழ்நிலை அப்படியே திரும்பியுள்ளது — அமெரிக்காவே இந்தியாவை நோக்கி தன் கண்களைத் திருப்பியுள்ளது.
இதற்கிடையில், தேஜஸ் விமான விபத்து… ஆனால் இந்தச் சம்பவத்தையே பயன்படுத்தி போலிச் செய்திகளை பரப்பும் சில நிழல் குழுக்கள்… யார்? ஏன்? என்று ராணுவ உளவுத்துறை தகவல்களை சேகரித்து வருகிறது.மேலும் ஐக்கிய அரபு அமீரகம் முதல் பல நாடுகள் — “இந்தியா, நீங்கள் சொல்வதை நாங்களும் கேட்கிறோம், உண்மை வெளியில் வர நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்கிறார்கள். அமெரிக்கா இதை இயல்பான விமான விபத்தாக எடுத்துக்கொண்டது… ரஷ்யா, பிரான்ஸ் போன்றவை — “விபத்து என்றாலும் விசாரணை அவசியம்” என்றன… பல நாடுகள் —போர் சூழல் வேறு… stunt வேறு…” என்று இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றன.
இந்தியாவை இன்றைக்கு அசைக்க முடியுமா? என்றால் அது முடியாத ஒன்றாக உள்ளது. உலக வல்லரசுகள் இந்தியாவுக்காக அசைந்து கொடுக்கும் நிலை உருவாகி உள்ளது. … உலகம் மாற்றம் கண்டுகொண்டிருக்கிறது… ஆனால் இந்த மாற்றத்தில் மையமாக நின்று ஒளிர்கிறது இந்தியா. உலகமே அதன் பக்கம் சாய ஆரம்பித்துவிட்டது. பாகிஸ்தான்–சீனா உறவு ஒருப்பக்கம் உடைந்துகொண்டிருக்கிறது… ரஷ்யா–உக்ரைன் போர் முடிவினை நோக்கி நகர்கிறது… அமெரிக்கா இந்தியா பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது… ஐக்கிய அரபு அமீரகம், மேற்கு நாடுகள், அனைத்தும் இந்தியாவின் குரலைக் கேட்கின்றன.அடுத்தடுத்து பல மாற்றங்கள் நடக்கப்போவதை இதே கணத்தில் நாமே உணர்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது… உலகம் முழுவதும் அதிகாரத்தின் மையம் இந்தியாவை நோக்கித் மாற தொடங்கியுள்ளது.
