24 special

ஸ்டாலினின் தளபதிக்கு சிக்கல்......? சிக்கி தவித்து வரும் அறிவாலயம் இறுதி கட்டத்தை நோக்கி திமுக?

EV Velu, Stalin
EV Velu, Stalin

தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகளை கடந்து ஆட்சி செய்து வரும் திமுக கட்சி அரசியலில் முடிவுக்கு வந்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தற்போது பெரும் சிக்கலில் சிக்கி என்ன செய்வது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் திமுகவில் உள்ள அமைச்சர்கள் கட்சியை விட்டு வேறு கட்சியில் இணைந்து வாழும் காலத்தை அந்த கட்சியில் இணைந்து செயல்படலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சிக்கல் நேர்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 


பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு அதிமுகவில் இருந்து வெளியில்வந்து திமுகவில் இணைந்தவர், இவர் தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் உடன் இடது கையாக செயல்பட்டு வருகிறார். ஒரு பக்கம் துரைமுருகன் என்றால் மருபக்கம் எவ வேலு, தேர்தலின் போது திமுகவிற்கு பெரும் பணத்தை வாரி வழங்குவதில் முக்கிய புள்ளி என்றே சொல்லலாம் அப்படி தான் எவ வேலு செயல்பட்டு வருகிறார். இதனை காரணமாகே வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எவ வேலுவை கண்காணிக்க தொடங்கினார்கள். இதனாலேயே கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் எவ வேலுவுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடத்தில் சல்லடை போட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், தங்க கட்டிகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக தெரிவித்தது.

இதனை கொண்டு கூடிய விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என கூறியதால் அறிவாலயமே மொத்தமாக கலங்கியது. இந்நிலையில் தான் ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்  பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவில் வந்த உடனே அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் இருந்து வருகிறார். குறிப்பாக பார்க்க வேண்டும் என்றால் கொங்கு மண்டலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரை தொக்கா தூக்கியது, இவருக்கு அடுத்த படியாக திமுகவிற்கு பெரும் ஆதரவு கொடுத்து வந்த அமைச்சர் பொன்முடியை தட்டி தூக்கியது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர், துரைமுருகன் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் வரும் நாட்களில் சிறை செல்லலாம் என தகவல் வந்த நிலையில் திமுகவில் உள்ள அமைச்சர்கள் கூடிய விரைவில் சிறைக்கு சென்று அங்கு தான் மந்திரி சபை நடக்கபோகுது என்ற பேச்சுக்கள் எல்லாம் எழுந்தது. 

இந்நிலையில், அடுத்து வர கூடிய நாட்களில் எவ வேலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீது மீண்டும் ரெய்டுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் திமுகவில் உள்ள முக்கிய தலைவர்களை சிறையில் அடைக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் முக்கிய அமைச்சர்கள் இப்போது மாற்று கட்சிக்கு செல்ல முன் வந்து முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. செந்தில் பாலாஜி சிறை சென்று ஜாமின் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கொங்கு மண்டல பகுதியில் உள்ள திமுக தொடஙர்கள் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூடாரம் மொத்தமாக சிதற வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டு வருகிறது.