24 special

வீரவசனம் பேசிய சின்னவருக்கு விழுந்த முதல் ஆப்பு! ரத்தீஷ், ஆகாஷ் தலைமறைவானது ஏன்.? களத்தில் இறங்கிய பாஜக! மொத்தமாக முடிந்தது!

MKSTALIN,PMMODI
MKSTALIN,PMMODI

கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். இந்த சூழலில் நடப்பாண்டு பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். ஏன் கடந்த மூன்று ஆண்டுகளாக பங்கேற்கவில்லை? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.  தற்போது ஓடோடி சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடியை சந்தித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 


கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பரம் போட்டோ சூட் நடத்தியே மக்களை ஏமாற்றிவிட்டார் முதல்வர் ஸ்டாலின். தொலைநோக்கு பார்வை இல்லாதா ஆட்சியாக அமைந்துவிட்டது இந்த திமுக ஆட்சி. இந்தியாவிலேயே அதிக கடன் அதிக ஊழல் கள் நடைபெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு. இதற்கிடையில் தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக துணை முதல்வர் உதயநிதிக்கு தான் குறி என தகவல்கள் வெளியாகிஉள்ளது. மேலும் டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளதே தவிர டாஸ்மாக் விசாரணைக்கு தடை விதிக்கல்லை. இந்த இடைக்கால தடையில் தான்  டெல்லிக்கு பறந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 

இதற்கிடையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை அப்பா டெல்லி பயணத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், ED ரெய்டுக்கு பயந்துதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த உதயநிதி, நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உதயநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.“மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என்று வழக்கம் போல எதுகை மோனையில் வீரவசனம் பேசிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிறார் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.தவறு ஏதும் செய்யவில்லை என்றால், வழியில் ஏதும் பயமில்லை என்றால், எதற்காக திரு. உதயநிதி அவர்களின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்று அவர் விளக்கம் கொடுப்பாரா?

மார்ச் 2011-ல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான சீட்டுப் பேரத்தின் போது, ​​CBI கோபாலபுரத்து வீட்டின் மேல் மாடியில் சோதனை செய்ய, கீழே பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிகழ்வுக்கு செல்வோமா?அன்று பயம் காட்டி பேரம் செய்தது அம்மையார் திருமதி. சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கிய காங்கிரஸ் அரசாங்கம் தான், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களோ, பாஜக-வோ அல்ல!

அன்று அரண்டு போன திமுக தலைவர்கள், இன்று வரை தங்களுக்கு எதிராக நடக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எல்லாம் மிரட்டுவதற்கு செய்யும் அரசியல் என்றே தொடர்ச்சியாக தவறாக தோற்றம் கொடுத்து வருகிறார்கள்.

அதற்குக் காரணம், கழுத்தில் கால் வைத்தபடி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை என்றே தெரிகிறது. அன்று திரு. உதயநிதி அவர்கள் அரசியலில் நுழையவில்லை என்றாலும், அந்த வரலாறு அவரை இன்னும் சுடுகிறது போல.கேள்வி, நீங்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு பயப்படுகிறீர்களா என்பது அல்ல! 

அவர் என்றுமே அரசியல் காழ்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகத் தலைவர்! நாட்டைக் காப்பதையும், வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதையும், நம் பழம்பெரும் நாகரிகத்தை மீட்டெடுப்பதையும் மட்டுமே உயிர் மூச்சாக நினைத்துச் செயல்பட்டு வரும் உன்னதத் தலைவர்! அப்படிப்பட்ட நிலையில், திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம் மட்டுமே…

ஆக, உண்மையான கேள்வி என்னவென்றால் - நீங்கள் நீதிக்கு பயப்படுகிறீர்களா என்பது தான்! அந்த நீதியானது நிச்சயம் இறுதியில் உங்கள் எண்ணத்தை எல்லாம் தூளாக்கி, திமுகவுக்குத் தக்கப் பாடம் கற்பிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை!என கூறியுள்ளார்