24 special

முதல் முறையாக யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் போட்ட ஒப்பந்தம்! அதிர்ந்த உலக நாடுகள்! இந்தியாவிடம் ஆயுதம் வாங்கும் இஸ்ரேல்!

pmmodi,Operation Sindhur
pmmodi,Operation Sindhur

உலகளவில் அதிநவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளில் முக்கிய நாடு இஸ்ரேல் ஆகும். அதன் ஆயுதங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும் அங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்களை உலக நாடுகள் போட்டி போட்டு வாங்கும். அந்த அளவிற்கு தனித்துவமான ஆயுத தயாரிப்பில் இருக்கிறது. இஸ்ரேலை போரில் வெல்வது அவ்வளவு எளிதானது இல்லை.காசா போரில் கூட சில நாட்களில் கைப்பற்ற முடியும் ஆனால் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. இஸ்ரேலின் நவீன ஆயுதங்களை பெரிதாக பயன்படுத்தவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அப்பேற்பட்ட இஸ்ரேல் தற்போது இந்தியாவிட ஆயுதம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு காரணம் ஆப்ரேசன் சிந்தூரில் சீனா அமெரிக்க துருக்கி போன்ற நாடுகளின் போர் விமானங்கள் ட்ரோன்கள் என அனைத்தையும் சுக்கு நூறாக்கியது இந்தியா. 


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத நிலைகளின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், 170  பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்.

இந்தியா நடத்திய தாக்குதல் பாகிஸ்தானை குலை நடுங்க செய்தது இதனை தொடர்நது பாகிஸ்தான் ஏவுகணைகளை ஏவியும் ட்ரோன்களை அனுப்பியும் அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளிலும் வீடுகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், பாகிஸ்தான் முயற்சிகளை வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்தியா முறியடித்தது. பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் முறியடித்தது இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசிய போது அவை அனைத்தையும்ரஸ்யாவின் எஸ்.400 மற்றும்  இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.

மிக வேகமாக வரும் எதிரிகளின் டிரோன்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், இன்னும் சொல்லப் போனால் எப்16 போன்ற போர் விமானங்களையும் கூட வானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் வகையில் ஆகாஷ் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. இந்த ஏவுகணையை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். மிக வேகமானது, பயங்கரமானது. 80 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. ஆகாஷ் ஏவுகணை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.மேலும் பிரோமோஸ்ஸின் வித்தையை இந்த போரில் பார்த்து உலக நாடுகள் வாயடைத்து போயுள்ளன. 

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் , பாகிஸ்தான் மேற்கொண்ட அதிரடி தாக்குதல்களின்போது இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைள்  பெரிய அளவில் உதவின. குறிப்பாக, Barak 8 எனப்படும் மீடியம் ரேஞ் ஏவுகணைதான் பதிண்டா உள்ளிட்ட ராணுவ எல்லைகளை பாதுகாத்து வருகிறது. இதை தவிர, கராச்சி, லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் தீவிரவாத நிலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட ஹாரோப் ட்ரோன்கள்தான் பயன்படுத்தப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர்' இன்போது, ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்தியா. இந்த ஆபரேஷனில் ட்ரோன்கள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இஸ்ரேலுடன் மோடி தலைமையிலான அரசு இணக்கமாக செயல்பட்டு வருகிறது. காலம் காலமாக பாலஸ்தீனத்துடன் இணக்கமாக செயல்பட்டு வந்த இந்திய அரசுகளில் இருந்து மாறுபட்டு, கிருஸ்தவர்களின்  நாடான  இஸ்ரேலின் முக்கிய கூட்டு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.11 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போது 34 மடங்கு ஏற்றுமதி அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2029ஆம் ஆண்டுக்குள் ஆயுத ஏற்றுமதி 50 ஆயிரம் கோடியை எட்ட வேண்டும் என இந்தியா இலக்கு வைத்திருப்பது குறிப்பிடதக்கது.இதற்கிடையில் முதல் முறையாக இந்தியாவிடம் இருந்து ஆயுதம் வாங்க இஸ்ரேல் ஒப்பந்தம்...150 கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோமீட்டர் தூரத்திற்கு ராக்கெட் ஏவும் லாஞ்சர்களை வாங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.