24 special

அரசியலை விட்டு வெளியேறும் உதய்! முதல்வர் தலையில் இடியை இறக்கிய டெல்லி! இது தான் நடக்கும் எல்லாம் over .!

udhayanidhistalin,enforcement department
udhayanidhistalin,enforcement department

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கட்சியிலும் ஆட்சியிலும் உதயநிதியை முன்னிலைப் படுத்துவதற்கு திமுக தலைமையாலும், முதலமைச்சரின் குடும்பத்தாலும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பல்வேறு போட்டோசூட்களும் நடடத்தப்பட்டது  


மேலும் இந்திய அளவில் உதயநிதியைத் தமிழகத்தின் முகமாக மாற்ற வேண்டும் என்பதற்கான பல்வேறு விளம்பர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.  ஆனால் உதயநிதி இன்னும் நடிகராகவே வாழ்ந்து வருகிறார். ஜாலியாக இருந்த உதயநிதிக்கு அரசியல் ஆர்வமின்மையும் மெத்தனமும் திமுகவின் முகம் என்ற வாய்ப்பை தட்டிப்பறித்துவிட்டதாகச் அறிவாலய உடன்பிறப்புக்களே  பேச ஆரம்பித்து விட்டார்கள். அன்பில் மகேசுடன் இணைந்து உதயநிதியின் ஆட்டம் தாங்க முடியாவில்லை. 

சினிமாவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான் உதயநிதியின் ஆசை என அவரின் குடும்ப வட்டாரங்களும் பேச ஆரம்பித்துள்ளது. அதன் விளைவு தான் தற்போது திமுக தலைக்கு மேல் கத்தி தொங்கியுள்ளது.  துணை முதல்வர்  உதயநிதி அவர்களின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள். இவர்கள் தான் சினிமா துறை மற்றும் டாஸ்மாக்கை கட்டுக்குள் வைத்திருந்தவர்கள். தற்போது அமலாக்கத்துறைக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளார்கள். 

இந்த நிலையில் உதயநிதி  தன் ஆதரவாளர்கள் அதிகமானோருக்குப் பதவி வழங்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிராகரித்திருப்பதால் உட்கட்சி பூசல் கட்சியில் மட்டுமல்ல குடும்பத்திற்குள்ளாகவும் எழுந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளை வேண்டுமென்றே உதயநிதி புறக்கணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி கண்டதாகக் கூறி முதலமைச்சருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிலும், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் உதயநிதி பங்கேற்காதது கட்சி வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் துணை முதல்வர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி தொகுதி சார்ந்த நிகழ்வுக்குக் கூட உரிய நேரத்தில் செல்வதில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.தொகுதி நிகழ்ச்சிக்குக் கூட உரிய நேரத்தில் வரமுடியாத உதயநிதி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் எப்படி பிரச்சாரம் செய்வார் என்ற கேள்வியும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.மேலும் முதலமைச்சர் தொடங்கி மூத்த அமைச்சர்கள் வரை தலைமைச் செயலகத்திற்கு வந்து அவரவர் பணிகளைச் செய்து வரும் நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி தலைமைச் செயலகத்திற்கு வருவதில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது.

முக்கியமான ஆலோசனையாக இருந்தாலும் மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு  அதிகாரிகளை தமது குறிஞ்சி இல்லத்திற்கு வரவழைத்து உதயநிதி ஆலோசனை மேற்கொள்வதும் உதயநிதி மீதான அதிருப்திக்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவின் உட்கட்சி பூசல் பூகம்பமாக வெடிக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் உதயநிதியை தேர்தலில் முன்னிலைபடுத்தினால் சீனியர்கள் பெரும்பாலனோர்  இந்தமுறை தேர்தலில் வேலை செய்ய முடியாது என ஸ்டாலினிடம் நேரடியாகவே கூறிவிட்டர்களாம். வாய்க்கு வந்தபடி மத்திய அரசை  விமர்சித்துவிட்டு எங்களை சிக்கலில் சிக்க வைக்கிறார்  அவரின் எதுகை மோனையால்  எங்களின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள் எனவும் கூறியுள்ளார்கள். 

கனிமொழிக்கும் ஆதரவு கூடியுள்ளது. ஏனென்றால்  தற்போது ஆப்ரேசன் சிந்தூர் தொடர்பாக அமைத்த குழுவில் ஒரு குழுவுக்கு கனிமொழி தலைமை தாங்கியுள்ளார். இதனால் மத்திய அரசுடன் கனிமொழி நெருங்கிவிட்டார் அதனால் டெல்லி பிரச்சனைகளை கனிமொழியிடம் கூற ஆரம்பித்துவிட்டார்கள் சீனியர்ஸ். இது ஸ்டாலினுக்கு பெரும்  ஷாக்கை கொடுத்துள்ளது. மேலும் உதயநிதி பிரச்சனை ஒருபுறம் கனிமொழியின் வளர்ச்சி ஒருபுறம் என ஷாக்கில் உறைந்த ஸ்டாலின்  டெல்லிக்கு  பறந்து நானும் ஸ்டராங் லீடர் என திமுகவினருக்கு காட்டியுள்ளார். உதயநிதி குறித்து ஏதும் பேசவேண்டம் என கூறிவிட்டதாம் டெல்லி தரப்பு . சட்டம் தன் கடமையை செய்யும் என கூறி அனுப்பிவிட்டார்களாம்.