Politics

#BREAKING சொன்னதை இரவோடு இரவாக செய்தார் அண்ணாமலை கடும் பரபரப்பு

#BREAKING சொன்னதை இரவோடு இரவாக செய்தார் அண்ணாமலை கடும் பரபரப்பு
#BREAKING சொன்னதை இரவோடு இரவாக செய்தார் அண்ணாமலை கடும் பரபரப்பு

திமுக சார்பான சிலர் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பள்ளப்பட்டி எனும் பகுதியில் நுழைய தடை விதித்ததாக கூறப்படும் நிலையில் அதிரடி மாற்றங்கள் இரவோடு இரவாக அரங்கேறியுள்ளன,கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம், பள்ளப்பட்டி பகுதியில் உள்ள, 'இஸ்லாமிய பெண்கள், தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல வேண்டாம், அரசியல் கட்சி பொதுக்கூட்டத்துக்கு செல்ல வேண்டாம்' என, ஜமாத் சார்பில் கூறப்பட்டுள்ளது.


அரவக்குறிச்சி தொகுதி புகளூரில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:பா.ஜ., பிரசார வண்டி பள்ளப்பட்டிக்கு செல்லும்; பிரசாரம் செய்ய எங்களுக்கு ஜமாத் அனுமதி தேவை இல்லை. நான்கு நாட்களுக்குள் பிரசாரம் செய்வோம். பள்ளப்பட்டி இந்தியாவுக்குள் தான் உள்ளது. யாரோ எட்டு பேர் கையழுத்து போட்டு விட்டு, பள்ளப்பட்டிக்குள் உள்ளே வரக் கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. நாங்கள் பள்ளப்பட்டியில் உள்ள, இஸ்லாமிய சகோதரிகளிடம் பேசும் போது, அவர்கள் பர்தா அணியவில்லை எனக் கூறியுள்ளனர்.

பள்ளப்பட்டியில் இஸ்லாம் தெரிந்த, குரான் ஓதத் தெரிந்த, சகோதரன் என்னுடன் பொது மேடையில், விவாதம் நடத்த வரவேண்டும்.இந்த முறை பள்ளப்பட்டியில் இஸ்லாம் சகோதரிகள் மூலம், தி.மு.க.,வை விட அதிக ஓட்டுகள் வாங்குவோம். ஓட்டுக்காக, இஸ்லாம் மக்களை, தி.மு.க., பயன்படுத்துகிறது. பிரசார கூட்டங்களுக்கு செல்கிறவர்களை தடுப்பது சட்ட விரோதம் என குறிப்பிட்டார்.

இந்திய சட்டத்தின் படி ஒரு வேட்பாளரை நிரகாரிப்பதற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது, ஆனால் தொகுதிக்குள் வரக்கூடாது என சொன்னால் அது தீண்டாமையை சேரும், அப்படி இருக்கையில் ஜமாத் உத்தரவு அரவக்குறிச்சியில் உள்ள பெரும்பான்மை மக்களை கொத்தடைப்படைய செய்துள்ளது.

திமுகவை தீவிரமாக ஆதரிக்கும் இளைஞர்கள் பலரும், ஜமாத் முடிவை கடுமையாக எதிர்த்தனர், ஒரு கட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து பலர் பள்ளப்பட்டி செல்ல தீர்மானித்ததாக தகவல் வெளியானது, இந்த தகவல் திமுக தலைமையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகள் பாஜக கூட்டணி பக்கம் திரும்பினால் தேர்தலில் கொங்கு மண்டலம், வட தமிழகம் பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட செயலாளர் மூலம் உடனடியாக ஜமாத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு திமுக தலைமை பேசியுள்ளாதம், அதையடுத்து உடனடியாக யாரையும் தடுக்க வேண்டாம் என மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது பள்ளப்பட்டி ஜமாத் தரப்பு. இதில் உண்மை என்னவென்றால் இந்திய சட்டத்தின் படி நான் பள்ளப்பட்டியில் வாக்கு சேகரிப்பேன் யாரும் தடுக்க முடியாது என அண்ணாமலை தெரிவித்தது தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளது.

இதையடுத்து உடனடியாக ஜமாத் பின் வாங்கி ஓடியுள்ளது, இந்திய சட்டம்தான் இந்தியாவில் செல்லும் என்பதை அதிரடியாக இரவோடு இரவாக உணர்த்தியுள்ளார் அண்ணாமலை.