Cinema

கிளம்பும் தேவர் அமைப்புகள் "விமான நிலைய" சர்ச்சை விஜய் சேதுபதி வீட்டிற்கு போலீஸ் விரைவா ?

vijay sethupathi and maga gandhi news
vijay sethupathi and maga gandhi news

நடிகர் விஜய் சேதுபதி நாட்டையும் தேவரையும் அவமானமாக பேசினார், மேலும் என்னையும் தாக்கினார்கள் அதனால்தான் விஜய் சேதுபதியை அடித்தேன் நான் மலையாளி கன்னடன் இல்லை சுத்த தமிழன் என் பெயர் மகா காந்தி என விஜய் சேதுபதியை அடித்தவர் தெரிவித்த பேட்டி நேற்று வெளியானது.


விஜய் சேதுபது விமான நிலையத்தில் அடிவாங்கிய சம்பவம் தமிழக ஊடகங்களை தாண்டி தேசிய ஊடகங்களிலும் எதிரொலித்தது வழக்கமாக நாடக நடிகர்கள் தக்காபட்டாலே உள்ளூர் மீடியா முதல் தேசிய மீடியா வரை நாட்டில் சகிப்பு தன்மை இல்லையா என மூன்று நாட்களுக்கு விவாதம் நடத்துவார்கள் ஆனால் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட செய்தி குறித்து எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லை.

மேலும் அடிவாங்கியதாக வெளியான வீடியோ வெளிவந்த பின்பும் விஜய் சேதுபதி தரப்பு காவல்நிலையத்தில் புகாரோ அல்லது  சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காத போதே பலரும் சந்தேகத்தை எழுப்பினர் இந்த சூழலில் அதற்கான விடை கிடைத்துள்ளது, விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபர் கேரளாவை சேர்ந்தவரோ அல்லது கர்நாடகாவை சேர்ந்தவரோ கிடையாது தமிழகத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

யூடுப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்த மாக காந்தி என்பவர் நான் தான் விஜய் சேதுபதியை அடித்தேன்,  விமான நிலையத்தில் அவரை பார்த்த நான் தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் என கூறினேன் இதெல்லாம் தேசமா என கேட்டார், நான் ஒரு தேசியவாதி தேசத்தை மதிக்கும் தேவர் வழியில் வந்தவன்.

மேலும் தேவர் குரு பூஜைக்கு வருவீங்களா என கேட்டேன் அதற்கு யார் தேவர் என தெரியுமா என தவறாக பேசினார், இதுகுறித்து கேள்வி எழுப்பிய என்னை அடிக்கவும் செய்தனர், இனிமேலும் பொறுத்து கொள்ள கூடாது என்றுதான் அடித்தேன், என்னை அடித்தார் திருப்பி அடித்தேன் தேசத்தையும், தேவரையும் தவறாக பேசியதால் அடித்தேன் என மாகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தேசத்தை நேசிப்பவர்கள் மத்தியிலும், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என சொன்ன தேவர் பெருமகனாரை நேசிப்பவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது, தேவர் சமூகம் சார்ந்த சிறப்பு செய்திகளை வெளியிடும் தேவர் மீடியா எனும் பக்கம் தெரிவித்ததாவது :-  க/பெ. ரணசிங்கம் படத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது அந்த வீட்டில் பசும்பொன் தேவரின் புகைப்படமும் இருந்தது. இந்த போட்டோ காட்சியில் வரக்கூடாது என கழட்ட சொன்னவர் தான் இந்த விஜய் சேதுபதி. அதே சேதுபதி இப்போது மீண்டும் தேவர் குறித்து பேசி அடி வாங்கி இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழலில் தேவர் சமூகம் மீது திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியுடன் விஜய் சேதுபதி செயல்படுகிறார், அவர் படங்கள் இனி தென் தமிழகத்தில் எங்கும் ஓடாது விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் சென்னை மற்றும் அவரது சொந்த ஊரான ராஜபாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டினை முற்றுகை இடுவோம் என தேவர் அமைப்புகள் சில எச்சரிக்கை விடுத்து வருகின்றன.இந்த சூழலில் விஜய் சேதுபதி மீண்டும் தக்காப்படலாம் அல்லது விவகாரம் வேறு பாதையில் செல்லலாம் என்பதால் உடனடியாக விஜய் சேதுபதி வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்க காவல்துறை விரைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதெல்லாம் தேசமா என விஜய் சேதுபதி கேட்டதும் தேவரை அவமான படுத்தும் வகையில் விஜய் சேதுபதி பேசியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருதை திரும்ப பெறுவதுடன் அவர் தமிழ் சினிமாவில் நடிப்பதை தடுக்க வேண்டும் தமிழ் மக்கள் விஜய் சேதுபதியை புறக்கணிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கே.கே தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி மீது தவறு இருக்கும் பட்சத்தில்தான் அடிவாங்கிய பின்பும் சட்ட ரீதியாக எந்த புகாரும் காவல் நிலையத்தில் கொடுக்காமலும் மேலும் இதுக்குறித்து பொது வெளியில் கருத்து சொல்லாமலும் அமைதியாக இருக்கிறார் மேலும் அவருக்கு ஒன்று என்றால் கருத்துரிமை நசுக்க படுகிறதா.... என கேள்வி எழுப்பும் ஊடகவியலாளர்களும் அமைதியாக இருப்பது மேலும் சந்தேகத்தை உறுதி படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.