India

யோகி ஆதித்யநாத் "அதிரடி" பதறும் மாஜிக்கள்..!

Yogi
Yogi

உத்திரபிரதேசம் : அரசு மற்றும் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான  சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிம்மசொப்பனமாக விளங்குகிறார். இதனிடையே முன்னாள் பகுஜன்சமாஜ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி ஹாஜி இக்பால் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த 21 கோடி சொத்துக்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


 சஹ்ரான்புரில் ஹாஜி இக்பாலுக்கு சொந்தமான 21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சொத்துக்கள் அனைத்தும் இக்பாலின் வேலைக்காரரான நசீம் என்பவரது பெயரில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சகரன்பூரின் எஸ்.எஸ்.பி ஆகாஷ் தோமர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"ஹாஜி இக்பால் கும்பலில் பலர் இருக்கின்றனர்.  ஹாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஏப்ரல் 9 அன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. 14(1) குண்டர் சட்டத்தின்கீழ் 21 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளோம். பல ஷெல் நிறுவனங்கள் மூலம் நிதி மோசடி செய்துள்ளார். அவர்மீது குண்டர்சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளின் மீதான கடும்நடவடிக்கைகள் தொடரும்.

மேலும் சில பினாமி சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை போன்ற  மத்திய அமைப்புகளுடன் இணைந்து  ஹாஜி இக்பாலின் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்வோம். இன்று எடுத்த நடவடிக்கை மிகப்பெரிய பறிமுதல் ஆகும்" என தெரிவித்துள்ளார். மேலும் மரக்கடத்தல் சட்டவிரோத செயல்கள்,சட்டவிரோத சுரங்கம்,

மக்களை அச்சுறுத்தி அரசு மற்றும் அரசு சாரா நிலங்களை மோசடியாக வாங்கி தனது உதவியாளர்கள் குடும்பத்தினர், உறவினர்கள் வேலையாட்கள் பெயரில் பதிவுசெய்ததாக தெரியவந்துள்ளது. பெஹாட் பகுதியில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக்குவித்துள்ளார். இவர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபங்கி பகுதியில் முன்னாள் சமாஜ்வாடி எம்பியின் வீட்டிலும் பறிமுதல் நடந்துவருகிறது.