Cinema

ஓஹோ விஷயம் வேறயா? சாலமன் பாப்பையாவிடம் பூமா குமாரி கேட்ட தரமான கேள்வி?

Salaman papaiya, booma kumari
Salaman papaiya, booma kumari

சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருது குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் அவருக்கு புரியும் மொழியில் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார் சமூக ஆர்வலர் பூமா குமாரி  சமீபத்தில் பேசிய சாலமன் பாப்பையா எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தார்கள்.


அந்த விருதில் என்ன எழுதி இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது என பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பேசி இருந்தார்   பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா, தனக்கு பத்மசிறீ விருது கொடுத்தார்கள். நான் அதை வாங்கப் போயிருந்தேன்.ஆனால், கொடுத்திருக்கக் கூடிய விருதில் என்ன இருக்கிறது என்று ஒரு எழுத்து கூட எனக்குத் தெரியாது. ஏனென்றால் அதில் எல்லாமே ஹிந்தியில்தான் இருக்கிறது. 

அதைப் பார்க்கும்போது இப்படித்தான் நாங்கள் தருவோம். அதை நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தித் தருவது திணிப்பாகவே இருக்கிறது. நான் பத்மஸ்ரீ விருதை வாங்கும்போதே ஏண்டா இப்படி ஆகிப்போச்சே நமக்கு எனத் தோன்றியது. 

ஏனென்றால் என்ன கொடுத்திருக்கிறார்கள் என்றே தெரியாமல் வாங்கி வந்திருக்கிறேன். இப்போது அது எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறது. விளங்காத ஒரு மொழியில் நமக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறார்கள். யாருக்கு அது பயன்படும்?  எனத் தெரிவித்துள்ளார் சாலமன் பாப்பையா. 

இங்கிருந்து வட மாநிலங்களுக்குச் சென்றுள்ள மக்கள் அங்கு சென்று, அந்த மொழிகளை கற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்காக வருபவர்களும் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தேவைப்பட்டால் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். உலகம் முழுவதும் செல்வதற்கு ஆங்கிலமும், உள்ளூரில் பேச தமிழ் மொழியும் கற்றுக்கொள்வது கட்டாயம்.

மூன்றாவது மொழியாக ஏன் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும்? ஏற்கனவே ஆங்கிலத்தால் எல்லா மொழிகளுமே சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் இதுவும் வந்து சேர்ந்தால், எங்கள் தாய்மொழி நிச்சயம் அடிபட்டுப்போகும். உயிரைக் கொடுத்தாவது தாய்மொழியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று தெரிவித்தார் சாலமன் பாப்பையா இந்த சூழலில்தான் சாலமன் பாப்பையாவிற்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் பூமா குமாரி அது பின்வருமாறு :-

எனது பெயர் பூமா குமாரி. பூமா தேவி இந்த புண்ணிய பூமி. பாரதம் தாண்டி இந்த பூமி பந்து. குமாரி எனில் மகள். பூமா தேவியின் மகள் சீதா தேவி. சீதாவை குறிக்கும் சொல் பூமா குமாரி.இதே போல நம் முதல்வர் தன் பெயர் விளக்கம் தர இயலுமா? பெயரே தமிழில் இல்லையே? சாலமன் பாப்பையா எனில்? விருது புரியாவிட்டால் பரவாயில்லை.

நீங்கள் சபையில் கௌரவிக்கப் பட்டீர்கள் என்பது புரிந்திருக்கும். உங்கள் பெயர் சாலமன் எனில் அது யாருக்குமே புரியலையே சார். புரியாத பெயரை சூட்டிக் கொள்வீர் ஆனால் விருதை நகையாடுவீரா? என நறுக் என கேள்வி எழுப்பி இருக்கிறார் ஆமாம் சாலமன் என்பது தமிழ் பெயரா என பலரும் இப்போது சாலமன் பாப்பையவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.