24 special

சுதேசி போர்க்கப்பல்கள் அறிமுகம்..! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்..!

rajnath singh
rajnath singh

மும்பை : நேற்று மும்பையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான நாசகார போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ்.உதயகிரி மற்றும் ஐ.என்.எஸ் சூரத் ஆகிய இரண்டையும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகப்படுத்திவைத்தார். அப்போது அவர் பேசுகையில் உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்தார்.


இதுகுறித்து மேலும் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங் " ஐ.என்.எஸ்.உதயகிரி மற்றும் ஐ.என்.எஸ் சூரத் இரண்டு போர்க்கப்பல்களும் வெற்றிகரமாக சோதனைசெய்யப்பட்ட பிறகு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகநாடுகளுக்கும் கப்பல் கட்டுமானத்தை செய்துகொடுப்போம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. நாங்கள் மேக் இன் இந்தியா மட்டுமல்ல உலகிற்காகவும் உருவாகுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்" என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த இரண்டு போர்க்கப்பல்கள் கடற்படை வடிவமைப்பு  (டி.என்.டி) இயக்குநரகத்தில் வடிவமைக்கப்பட்டு முழுவதுமாக மும்பை மசாகன் டாக் லிமிடெட் (MTL) ஆல் உருவாக்கப்பட்டு ஒரே நேரத்தில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனையிடப்பட்டது. ப்ராஜெக்ட் 15 பி திட்டத்தின் கீழ் திருட்டுத்தனமாக எதிரிக்கப்பலை அழிக்கும் கப்பல்களில் நான்காவது மற்றும் கடைசி கப்பல் சூரத் ஆகும்.


இரண்டாவது கப்பலான உதயகிரி ப்ராஜெக்ட் 17A போர்க்கப்பல் திட்டத்தின் ஒருபகுதியாகும். ப்ராஜெக்ட் 15பி வகை கப்பல்கள் இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை அழிப்பான்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு கப்பல்கள் மட்டுமல்லாது மூன்றாவது மற்றும் நான்காவது கப்பல்கள் பரிசோதனையில் உள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள மலைத்தொடரின் நினைவாக ஒரு கப்பலுக்கு உதயகிரி என பெயர்சூட்டப்பட்டுள்ளது.

மேலும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் சென்சார்கள் மற்றும் இயங்குதள மேலாண்மை அமைப்புகளுடன் பி 17 பிரிகேட்ஸ் ஷிவாலிக் க்ளாஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. 15பி மற்றும் P-17A போன்ற இறுக்கப்பல்களும் இந்திய கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கப்பல்கட்டுமானம் அடுத்தகட்ட வளர்ச்சியை பெற்றுவருவதாக சமீபத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.