Tamilnadu

ஏன் தமிழக ஊடகங்கள் இந்த செய்தியை வெளியில் சொல்லவில்லை அர்ஜுன் சம்பத் கேள்வி!

arjun sampath
arjun sampath

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழகஊடகங்கள் ஏன் இது போன்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இல்லை என மத்திய அமைச்சர் குறித்த செய்தியை பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார் அவை பின்வருமாறு :-


இது போன்ற செய்திகள் ஏன் தமிழ் ஊடகங்களில் வருவதில்லை என்று தெரியவில்லை இண்டிகோ விமானத்தில் வானத்தில் 12 A இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் மாரடைப்பால் மாரடைப்பு மற்றும் வேறு சில பிரச்சனைகளை ஒன்றாக பாதிக்கப்பட்டுள்ளார், அப்போது விமானத்தில் ஒரு மருத்துவர் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்தார் .

அவர்தான் மத்திய அமைச்சர் டாக்டர். பகவத் கரட் (மோஸ்-நிதி) அவர்கள், அமைச்சர் என்ற பெருமையை விட்டு கிட்டத்தட்ட அரை மணி நேரம் மருத்துவராய் உழைத்தார், விமானத்தில் சில அவசர மருந்துகளும் ஊசிகளும் இருந்தன, அதனை வைத்து  நோயாளியின் உடல் நிலைமையை கட்டுப்பாட்டிற்க்கு கொண்டுவந்தார்.

விமானம் தரையிறங்கியதும்  நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 1 நாள் உரிய சிகிச்சைக்கு பிறகு நோயாளி குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இன்று அந்த நோயாளியும் அவரது குடும்பமும் மத்திய அமைச்சர் டாக்டர் அவர்களுக்கு நன்றி தெரிவித்திக்கிறார்கள், பாஜக மந்திரி என்பதால் எந்த தமிழ் ஊடகங்களும் இதை வெளியே சொல்லவில்லை,பாரத் மாதா கி ஜெய் எனவும் அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் டீ கடையில் டீ குடித்தார் என்பது தலைப்பு செய்தியாக மாறிய நிலையில் உயிரை காப்பாற்றிய மத்திய அமைச்சரின் செய்தி துண்டு செய்தியாக மாறி இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.