Cinema

விஜய் அரசியலுக்கு உதவி செய்வது யார்..? வெளியான தகவல்!

Vijay
Vijay

தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான செய்திகள் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அடிக்கடி தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி கொண்டே இருந்தார். அதன் பிறகு மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும் விழாவை ஏற்படுத்தினார். இதன், பிறகு அரசியல் காலத்தில் பரபரப்பாக விஜய் பெயர் பரவியது. தற்போது கட்சியை தேர்தலில் கமிஷனில் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் விஜய் பக்கமும் அரசியல் தலைவர்களின் கவனம் திரும்பியது. தற்போது விஜய்க்கு யார் பண உதவி செய்கிறார் என பராபர்ப்பஉ தகவல் பேசப்பட்டு வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் விஜய் சினிமாவில் இருந்து அரசியலில் தனது பங்களிப்பை மக்களுக்கு கொடுக்க இறங்கியுள்ளார். விஜய் சுமார் ஐந்து வருடமாக தேர்தலை சந்திக்கபோகிறார் அதிமுக- திமுகவை தொடர்ந்து மூன்றாவது கட்சியாக விஜய் இறங்கவுள்ளார் என பேச்சு எழுந்தது. சமீபத்தில்பனையூரில் நடந்த சந்திப்பில் இது உறுதியானது. விஜய்க்கு எல்லா அங்கீகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் கட்சி சார்பாக அவரது ரசிகர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. நடுவில் விஜய் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் விஜய் கட்சி சம்பந்தமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறினார். 

ஆனால், விஜய் பொறுத்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் தான் தன்னை முழுமையாக அரசியலில் இறங்குவார் என அவரது  தரப்பு உறுதிப்படுத்தியது. ஏனெனில் இதன் மூலம் தனக்கு எவ்வளவு வாக்குகள் விழுகிறது என்பதை அவர் தெரிந்து கொள்ள நினைக்கிறார். அதேநேரம், நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் சினிமாவை சேர்ந்தவர்கள் விஜய் இரண்டு வருடங்களுக்கு பிற்காடு சினிமாவில் தலை வைக்கமாட்டார் என பேச்சுக்கு அது முற்றியுலும் பொய் என சிலர் நடிகர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில், விஜய்க்கு 250 கோடியை சம்பளமாக கொடுப்பதற்கு தயாரிப்பாளர் தயாராக இருக்கிறார்கள். இப்போது விஜய் வருடத்திற்கு 2 படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். 2 வருடங்களில் 4 படங்கள் நடித்தால் அவரின் சம்பளம் 1000 கோடி. அதை வேண்டாம் என சொல்ல விஜய்க்கு எப்படி மனசு வரும்? என கேட்கிறார்கள் சிலர்.. இது தான் உண்மை என சிலர் கூறுகின்றனர். அரசியலில் இறங்கினால் தொகுதிக்கு 40 கோடி செலவு செய்ய வேண்டும். இல்லையேல், வெற்றிபெற முடியாது. காசு கொடுக்காமல் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். 40 தொகுதிகளுக்கு மொத்தம் 1600 கோடி வேண்டும். ஆனால், அவ்வளவு பணம் கண்டிப்பாக விஜயிடம் இருக்காது. விஜய்க்கு இத்தனை கோடி பணம் யாரு கொடுக்கிறார் என கேள்வு இயல்பாக மக்களிடம் எழுந்துள்ளது.

ஒருபக்கம் விஜய்க்கு வெளிநாடுகளில் இருந்து சிலர் உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சமீபமாக வெளிநாடுகளுக்கு செல்வது அவரது மகன் படிக்கும் இடத்திற்கு தான் செல்கிறார் என பேசப்பட்டது. விஜய் மகன் மனைவி எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு அரசியலுக்காக தான் செல்கிறார் அங்கு சிலர் விஜய்க்கு ஆலோசனை வழகியுள்ளதாகவும் விஜயின் மூலம் அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்கப்போகிறது? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.