Tamilnadu

"கிஷோர் கே சுவாமி" எப்போது விடுதலை? போலீஸ் வாகனத்தில் பேசும் வீடியோ வைரல்!

krishore k swamy
krishore k swamy

ஈவேரா அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், கடந்த ஜூன் 10-ம் தேதி அன்று புகார் அளித்தார்.


அதனடிப்படையில் 153 - கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) ( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

இதனையடுத்து கிஷோர் கே. சாமியை ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில்வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் சைதாப்பேட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். கிஷோர் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்த்த நேரத்தில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க பட்டது அன்றில் இருந்து பல்வேறு வழக்குகளில் கிஷோர் சுவாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை ஆளும் அரசாங்கம் கடந்த 5 மாதங்களாக சிறையில் அடைத்துவைத்து இருப்பதாக  குற்றசாட்டுகள் எழுந்த நிலையில்.,

நேற்றைய தினம்  கிஷோர் கே சுவாமியை விசாரணைக்காக காவல்துறையினர் சைத்தாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்தனர், இந்நிலையில் கிஷோரை சந்தித்த அவரது நண்பர்கள், கிஷோர் நலமுடன் இருப்பதாகவும் முன்பை காட்டிலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தீவிரமாக கருத்துகளை பகிர்ந்து வருவதாகவும்.விரைவில் அவர் விடுதலை ஆவார் என குறிப்பிட்டுள்ளனர், இந்த சூழலில் கிஷோர் போலீஸ் வாகனத்தில் இருந்து கொண்டு அவரது ஆதரவாளர்கள் உடன் பேசும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.