Politics

ராயபுரம் தொகுதியில் என்ன நடக்கிறது திமுகவின் திட்டம் சொதப்பியது எப்படி?

Jeyakumar
Jeyakumar

சட்டமன்ற பொது தேர்தல் பிரச்சாரங்கள் விருவிருப்பாக நடைபெற்று கொண்டு இருக்க தலைநகர் சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான ராயபுரம் தொகுதியில் அதிமுக திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது, அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.


தமிழக அரசியல்வாதிகளில் முக்கியத்துவம் பெற்றவரான ஜெயக்குமார் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற்போது அமைச்சராக இருக்கும் இவர், சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்து 29 செப்டம்பர் 2012 அன்று அப்பதவியை இராஜினாமா செய்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக 1991, 2001, 2006, 2011 மற்றும் 2016 தேர்தலில் ராயபுரம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். தற்போது மீன்வளம், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராக பணியாற்றும் ஜெயக்குமார், இராயபுரம் தொகுதியின் வலுவான அதிமுக வேட்பாளர்.

தொகுதியில் பெரும்பான்மை மக்களான மீனவ மக்களின் பிரதிநிதியாக ஜெயக்குமார் இருப்பது அப்பகுதியில் அவருக்கானா வலுவான தளத்தை உயர்த்துவதாக உள்ளது,  திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மூர்த்தி  தொகுதியில் பணத்தை நம்பி களமிறக்கபட்டுள்ளார் என தொகுதி முழுவதும் திமுகவினரே பேசி வருகின்றனர்.

தொகுதியில் இயல்பாக அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதும், அனைத்து மக்களையும் அரவணைத்து செல்வது அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக உள்ளது , கொரோனா காலத்தில் வீடு தேடி வந்து உதவி செய்தது அவருக்கு மேலும் ஆதரவாக அமைந்துள்ளது, திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மூர்த்தி தொகுதியில் வாக்காளர்களை கவரும் வகையில் எந்த ஒரு உதவியையும் கொரோனா காலத்தில் செய்யவில்லை.

ஒரு காலத்தில் கட்ட பஞ்சாயத்து ரவுடிசம் என இருந்த ராயபுரம் தொகுதி இப்போது அமைதியான தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் ஜெயக்குமார் கடந்த 20 ஆண்டுகளாக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ வாக தொடர்ந்து இருப்பதுதான் என தொகுதி மக்களே குறிப்பிடுகின்றனர், மீனவ மக்கள் நிறைந்திருக்கும் ராயபுரம் தொகுதியில் 10- ல் 8 வீடுகளில் ஜெயக்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வீட்டின் முகப்பு படங்களில் மாட்டபட்டுள்ளன.

திமுகவிற்கு என்று இந்த பகுதியில் வாக்கு வங்கி இருக்கிறது ஆனால் இவை அதிமுக வேட்பாளரான ஜெயக்குமாரை வீழ்த்தும் அளவிற்கு கண்கூடாக இல்லை, தொடர்ந்து 5 வது முறையாக ராயபுரம் தொகுதி மக்கள் அமைச்சர் ஜெயக்குமாரை மீண்டும் தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்புவது உறுதியாகியுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமாரை வீழ்த்த திமுக பல்வேறு வியூகங்களில் காய் நகர்த்தியும், ராயபுரம் தொகுதி வேட்பாளர் தேர்வில் திமுக சொதப்பியது, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வேட்பாளரை தேர்வு செய்தது உள்ளிட்ட பல காரணங்கள் திமுக கடந்த முறை பெற்ற வாக்குகளை காட்டிலும் குறைவான வாக்குகளையே இந்த முறை பெரும் என்பதே தற்போதைய ராயபுரம் தொகுதி கள நிலவரம்.