நான் என்றாவது அப்படி செய்ததுண்டா.. கண்ணீர்விட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரணம் என்ன?Rajenthrabhalaji
Rajenthrabhalaji

அதிமுக விருதுநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலஜி இன்று சிவகாசியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார் அப்போது அதிமுக நிர்வாகிகள், சிவகாசி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திர பாலாஜி நிர்வாகிகள் முன்னிலையில் கண்ணீர் விட்டது, அதிமுக நிர்வாகிகளை கலங்க செய்தது, தான் சிறு பான்மையினர் சமூகத்தை சேர்ந்தவன் எனது சமூகம் வாக்குகள் ஒன்றும் பெரிதாக இல்லை என்னை போன்ற மனிதனை கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களை வெற்றி பெற செய்பவர் அம்மா என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சுட்டி காட்டினார்.

மேலும் கடைசியாக ஜெயலலிதா அவர்கள் நிகழ்ச்சி முடித்துக்கொண்டு திரும்பும் போது எப்போதும் எங்களை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு செல்வார் ஆனால் கடைசியாக வழக்கத்திற்கு மாறாக டாட்டா காட்டிவிட்டு சென்றார் அன்றோடு அவரை பார்க்க முடியவில்லை என கண்ணீர் சிந்தினார் அமைச்சர்.

இந்த காட்சிகள் கட்சி நிர்வாகிகளை கலங்க செய்தது தொடர்ந்து பேசியவர் தான் அனைத்து உதவிகளையும் கட்சியினருக்கு செய்ததாகவும் தன்னால் அனைத்து கட்சியினருக்கும் பலன் என்றும் குறிப்பிட்டார், எதையும் அடித்து கூறும் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் விட்டது, பார்ப்போரையும் கண் கலங்க செய்துள்ளது.

மேலும் நான் என்றாவது எனக்கு தெரிந்தவர்கள் நம் கட்சியை சேராதவர்களுக்கு பதவி கொடுத்து இருக்கேனா என்றாவது அப்படி செய்ததுண்டா எனவும் உணர்ச்சி பொங்க பேசினார்.


Share at :

Recent posts

View all posts

Reach out