World

அமெரிக்காவில் ராஜ்நாத், ஜெய்சங்கர் என்ன நடக்கிறது வீட்டோ அதிகாரம் கிடைக்கிறதா?

Modi conference
Modi conference

பிரபல சமூக வலைத்தள  எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் அமெரிக்காவில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நடந்த உரையாடல் குறித்து தனது ஸ்டைலில் கேலியுடன் கலந்து சில தகவல்களை கொடுத்துள்ளார் அது பின்வருமாறு :-


அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணிய ஜெய்சங்கரும் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் அமெரிக்க உச்சபீடத்தை சந்தித்துள்ளனர், இன்று உலகை ஆட்டிவைக்கும் அந்த பீடத்தில் அமெரிக்க அதிபரும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கனும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினும் உண்டு.

அந்த பீடத்தை இந்திய அமைச்சர்கள் சந்தித்தபொழுதே காணொளி வாயிலாக மோடியும் கூட்டத்தில் கலந்து கொண்டார் , அப்பொழுது ரஷ்யாவின் புச்சா நகர் மனுகுல கொடுமையினை இந்தியா கண்டித்ததை வரவேற்ற பிடன் மேமாதம் ஜப்பானில் நடக்க இருக்கும் குவாட் அமைப்பின் கூட்டத்தில் மோடியினை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பொதுவாக அமெரிக்க அரசின் கூட்டங்களின் பேச்சும் படமும் சில செய்திகளை உலகுக்கு சொல்வதற்காக பத்திரிகைகளுக்கு தரபடும், அவ்வகையில் ரஷ்யாவிடம் மிக நெருக்கமாக இல்லா இந்தியாவினை நாங்கள் ஆதரித்து குவாட் அமைப்பில் வலுவான இடம் தருவதாக சொல்லும் அமெரிக்காவின் அறிவிப்பாகவே இது கருதபடுகின்றது.

குவாட் அமைப்பில் இந்தியா இருப்பதுதான் சீனாவுக்கு எதிரான காரியங்களில் இந்தியாவுக்கு கைகொடுக்கும், உலகம் முழுக்க உக்ரைன் பரபரப்பு தொற்றியிருகும் நேரம் இந்திய அமைச்சர்களை அமெரிக்க தலமை பீடம் சந்திப்பதும் அதில் மோடி தோன்றுவதும் இந்தியா உலக அரங்கில் சக்திமிக்க நாடாய் நிற்கின்றது என்பதை காட்டுகின்றது.

இது இன்னொரு செய்தியினை சொல்லாமல் சொல்கின்றது, அதாவது சோவியத் யூனியனுக்கு பின் அந்த இடத்தை ரஷ்யா பிடித்திருந்தது இனி ரஷ்யா நிலை சிக்கல், அந்த வலுவான இடத்தை சீனா பிடிக்கும் வாய்ப்புள்ளது.

ஆனால் அந்த இடத்தை இந்தியாவினை கொண்டு நிரப்ப மேல்நாடுகள் முயற்சிக்கின்றன, இனி ஒருவேளை ரஷ்யா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து நீக்கபட்டால் அந்த நிரந்தர உறுப்புநாடு பதவி வீட்டோ அதிகாரத்துடன் இந்தியாவுக்கு கிடைக்கலாம்

காட்சிகள் அதை நோக்கி நகர்வதாகத்தான் தெரிகின்றது, மோடியின் ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்கும் நேரமிது அந்த வரலாற்று சாதனையும் நடக்க வாய்ப்பு பிரகாசமாய் இருக்கின்றது ஒருவேளை இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரம் கிடைத்தால் என்னாகும்?

தமிழக திராவிட உபிக்கள் அது ஒன்றிய அரசின் வீட்டோ அதிகாரம், தமிழக முதல்வருக்கும் அதில் பங்கு உண்டு அதனால் இந்தியா உலக அரங்கில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துமுன் இந்திய பிரதமர் அதை பயன்படுத்த ஒரு வீட்டோ அதிகாரம் இந்திய அளவில் தமிழக முதல்வருக்கு வேண்டும் என கொடிபிடிப்பார்கள்

இருந்துபாருங்கள், நிச்சயம் செய்வார்கள் எல்லாவற்றிலும் குழப்பியியடிக்கும் அவர்கள் இந்தியாவின் வீட்டோ அதிகாரத்தினை பயன்படுத்த எங்களுக்கும் வீட்டோ வேண்டும் என கொடிபிடிப்பார்கள் என கிண்டலாக தான் சொல்ல வந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்.