Cinema

அடடே பாட்டே வந்துருச்சா? சொல்லவே இல்லை போட்டான் பாரு மெட்டு!

Annamalai , Arasa
Annamalai , Arasa

அரசியல் களம் என்பது முன்பு மேடை பேச்சு, திண்ணை பிரச்சாரம் தெருமுனை பிரச்சாரம் என இருந்தது கடந்த காலம், ஆனால் தற்போது முகநூல், ட்விட்டர் என களம் மாறிவிட்டது, இங்கும் தெரு முனை பிரச்சாரங்கள் போல் காரசார விவாதங்களும் அரங்கேறி வருகின்றன.


இந்த சூழலில் சமீபத்தில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளான இரண்டு சம்பவங்கள் என்றால் ஒன்று தமிழக அமைச்சர் பொன்முடி அவர்கள் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியதாக விவாதமானது.

அடுத்தது இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேச அதற்கு பதிலடி கொடுத்து அண்ணாமலை பெரியார் பேசிய 21 ம் பக்கம் குறித்து மேடையிலேயே வாசித்து காட்டியது, இது பெரும் வைரலாக மாறியது, இந்த சம்பவத்தை ஒட்டி இணையத்தில் வைரலாக ஒரு பாடல் வலம் வந்த வண்ணம் உள்ளது அதில்,..

ஆ. ராசா பேசியதையும் அண்ணாமலை கொடுத்த பதிலடியையும் வைத்து ரஜினியின் பேமஸான முத்து பட பாடல் மெட்டை கொண்டு பாடல் போடப்பட்டு இருக்கிறது, இந்த பாடல் தற்போது மிகவும் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.