Cinema

விஜய் டிவிக்கு எதிராக கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்.. திட்டம் போட்டு வெளியிட்டதாக ஆவேசம்..!

actor vijay beast movie
actor vijay beast movie

நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட ட்ரைலர் வெளியான நேரத்தில் விஜய் டிவி குழுமத்தை சேர்ந்த விஜய் சூப்பர் முகநூல் பக்கத்தில் குர்கா திரைப்பட காட்சிகளை பகிர்ந்த காரணத்தால் விஜய் டிவி நிர்வாகத்தை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.


தமிழ் சினிமா நட்சத்திரம் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் பாடிய அரபிக்குத்து பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் யூ டியூப்பில் இந்த பாடல் 250 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்தது.

இந்தியாவில் முதல்முறையாக பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் 'பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்' என்ற நவீன டெக்னாலஜி முறையில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது . டிரைலரின் மூலம் பெரிய மால் ஒன்றில் உள்ளவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது போன்றும் அப்போது அவர்களுடன் அங்கு இருக்கிற உளவு அமைப்பை சேர்ந்த விஜய் மக்களை காப்பாற்றுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ட்ரைலர் வைரலாகும் நிலையில் சிலர் இந்த படம் யோகிபாபு நடித்த குர்கா படத்தின் அடுத்த வெர்சன் எனவும் கிண்டல் அடிக்க தொடங்கினர், இப்படி விமர்சனங்கள் வெளியாகி கொண்டு இருக்கும் நேரத்தில் விஜய் சூப்பர் தொலைக்காட்சி அதன் முகநூல் பக்கத்தில் குர்கா படத்தின் காட்சிகளை பகிர்ந்துள்ளது.

வேண்டும் என்றே பீஸ்ட் படத்தின் ட்ரைலரை கலாய்க்கும் விதமாக விஜய் டிவி நிர்வாகம் அவ்வாறு செயல்பட்டாதாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர், படத்தில் விஜய் அரசியல் பபேசிய நிலையில் சத்தமே இல்லாமல் சினிமா அரசியல் செய்துவிட்டது விஜய் சூப்பர் தொலைக்காட்சி என்கின்றன சினிமா வட்டாரங்கள்.