
தமிழ் சினிமாவில் இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி நாக்க முக்க, என் உச்சி மண்டையில மற்றும் ஆத்திச்சூடி போன்ற பல பாடல்கள் சூப்பராக இசையமைத்து அந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. ஒரு பிரபலமான இசையமைப்பாளராகவே விஜய் ஆண்டனி அனைவராலும் பார்க்கப்பட்டார். இசை அமைப்பில் மட்டுமல்லாமல் அதன் தொடர்ச்சியாக நடிப்பதிலும் தனது பணியை மேற்கொண்டு வந்தார். நான் என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சலீம், பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் வெளியாகி மக்களிடையே இவருடைய நடிப்பிற்கு ஒரு வரவேற்பும் பெற்று வந்தது. அதே சமயம் இவர் பல விமர்சனங்களுக்கும் ஆளாகி கொண்டு வந்தார். மேலும் சமீபத்தில் ரோமியோ என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட இயேசு காலத்தில் இருந்து மதுப்பழக்கம் என்பது இருந்து வருகிறது என்று கூறி பல சர்ச்சைகளுக்கு உள்ளானார்.
மேலும் இவருடைய ரோமியோ திரைப்படமானது சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இப்படி வெற்றிகரமாக அந்த திரைப்படம் ஓடிக்கொண்டே இருக்கும் நேரத்தில் திரைப்படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்களை பலரும் உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் என்ற ஒரு ரிவ்யூ அளிப்பவர் ஹோமியோ படத்தின் விமர்சனங்களை தாண்டி திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அதிகமாக எடிட்டிங் ஒர்க் செய்துள்ளார் என்றும், இது அவருக்கு வேண்டாத வேலை என்றும் நேரடியாக தாக்கியுள்ளார். ஆனால் அப்போது எந்த பதிலும் அளிக்காமல் விஜய் ஆண்டனி அமைதி காத்து வந்தார். தொடர்ந்து பல திரையரங்குகளில் இந்த திரைப்படமானது ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் நினைத்தபடி கலெக்ஷன் எதுவும் இல்லாததால் கடுப்பான விஜய் ஆண்டனி இது போன்ற ரிவ்யூக்களை பார்த்துவிட்டு தான் மக்கள் திரைப்படத்தை பார்க்காமல் நன்றாக இருக்காது என்று முடிவு செய்து விடுகின்றனர் என்று கருதினார். இதனை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என்றும் ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தனது இணையதள பக்கத்தில் ஒரு பதிவிட்டினை செய்துள்ளார்!! அது என்னவென்றால்...!
இப்போது உள்ள சமூக வலைத்தளங்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு அனைவரும் ரிவ்யூ கொடுக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் பல youtube சேனல்கள் இதற்கெனவே ஆரம்பித்து வீடியோக்களும் பதிவிட ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் என்பவர் பல திரைப்படங்களுக்கு ரிவ்யூ கொடுத்து வருகிறார். மேலும் இவர் பல நல்ல திரைப்படங்களை தவறாக ரிவ்யூ கொடுத்து வருவதால் அவருக்கு பலவிதமான எதிர்ப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
அந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படத்திற்கும் எதிராக ரிவ்யூ கொடுத்துள்ளதால் கடுப்பான விஜய் ஆண்டனி முதலில் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களுக்கு தவறான ரிவியூக்களை அழித்து அதன் பிறகு சமீப காலமாக அந்த திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பும் பெற்று வருகிறது. அதுபோலவே தற்போது ஒரு நல்ல திரைப்படமான ரோமியோவையும் தவறாக கருத்துக்களை பரப்பி வரும் ப்ளூ சட்டை மாறன் போன்ற ரிவ்யூ அளிப்பவர்களுக்கும், மேலும் தமிழ் சினிமாவை குறை கூறும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. மேலும் ரோமியோ ஒரு நல்ல திரைப்படம் என்றும் அதனை அனைவரும் சென்று பாருங்கள் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ரோமியோவை அன்பே சிவம் ஆகி விடாதீர்கள் என்றும் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த நேரடி பதிவு தற்போது இணையங்களை கலக்கி வருகிறது.