24 special

வெட்டி பயலுக... பேச்சு கேட்டு தமிழக அரசு தாசில்தாரையும், DSP ஐயும் மாத்திடுச்சு..! H ராஜா தாறுமாறு தாக்கு!

H raja,  jeeva
H raja, jeeva

யூடுப்பில் வீடியோ போடும் வெட்டி பய பேச்சை எல்லாம் கேட்டு தாசில்தார் மற்றும் பொறுப்பு DSP ஆகியோரை பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கும் செயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்த போகிறது என அரசு ஊழியர்கள் வெளிப்படையாக ஆளும் அரசிற்கு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.


அனுமதியின்றி வீட்டில் வைக்கப்பட்ட பெரியார் சிலையை அகற்ற உத்தரவிட்ட தாசில்தார் மற்றும் பொறுப்பு Dsp ஆகியோரை தமிழக அரசு நேற்று மாற்றம் செய்து உத்தரவிட்டு இருப்பதுடன் நடவடிக்கை எடுத்த DSP யை காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்ட சம்பவம் அரசு ஊழியர்களை அதிர செய்துள்ளது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான H. ராஜா விரிவாக என்ன நடந்தது என குறிப்பிட்டு இருக்கிறார் அதில்,காரைக்குடி அருகில் கோட்டையூர் உதயம் நகரில் யாரோ இளங்கோவன் என்கின்ற திக காரர் வீடு கட்டி அவர் வீட்டு முன்பாக ஈவெரா சிலை வைத்ததாகவும் அது அனுமதியின்றி வைத்த காரணத்தால் அது நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் நமக்கு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

என்‌ பட்டா இடத்தில் வைத்தேன் என்று அந்த திக‌ காரர் பேசிக் கொண்டேயிருக்கிறார். பட்டா இடத்தில் தான் வீடு கட்டுகிறோம். ஆனால் அந்த வீட்டிற்கு local body approved plan இருந்தால்தான் கட்ட முடியும். அதில் deviation இருந்தா கூட local body இடிக்கலாம். அவர்களுக்கு அதிகாரம் இருக்கு. இவருடைய Compound wall யை உடனடியாக இடிக்க வேண்டும் ஏனெனில் அதற்கு  executive officer யிடம் அனுமதி வாங்காமல் Compound wall கட்டியிருக்கிறார். 

பள்ளத்தூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டபோது அந்த ஆய்வாளர் அவர்கள் நீங்கள் இதற்கு மாவட்ட கலெக்டரிடம் தான் பெற வேண்டும் ஏனென்றால் இது போன்ற விஷயங்களுக்கு கலெக்டர் தான் அனுமதி கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அவ்வாறு சொல்லியும் ஒரு அகம்பாவமாக அனுமதியின்றி அங்கு ஈவெரா சிலையை வைத்ததால் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டிருக்கிறது.இந்த செய்திகள் வெளிவரும் வரை எனக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாது.

ஆனால் விஷமத்தனமாக Jeeva Today என்ற தேசவிரோத பிரிவினைவாத youtube சேனலில் திராவிட மாடலா? ஹெச்.ராஜா மாடலா?  என்ற தலைப்பில் என் வீட்டிற்கு நான் செல்லும் பாதையில் கார் திரும்பும் இடத்தில் அந்த வீடு இருப்பதாகவும் அந்த ஜீவா என்ற நபர் பேசியிருக்கிறார். 

இது அப்பட்டமான பொய் என் மீது அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது. இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நான் எப்போதும் என் வீட்டிற்கு செல்வது அழகாபுரி வழியில் தான் என்பது காவல் துறைக்கும் மற்றும் ஊர் பொது மக்களுக்கும் தெரியும் இருந்தும் என் மீது அவதூறு பரப்பும் விதமாக இது செய்யப்பட்டு இருக்கிறது.

இன்றைய தினம் காரைக்குடி தாசில்தார் திரு.கண்ணன் அவர்களையும் தேவகோட்டை டிஎஸ்பி காரைக்குடி பொறுப்பு டிஎஸ்பி இருந்தார் இருவரையும் பதவி இடம் மாற்றம் செய்திருக்கிறார்கள்.  அது மட்டுமில்லாமல் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி இருக்கிறார்கள். 

ஒரு திக காரன் அனுமதி இல்லாமல் அந்த இடத்தில் ஈவெரா சிலையை வைத்திருக்கிறார். நிர்வாகம் நியாயப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது.  நியாயமாக நடந்து கொண்ட அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு திக திமுக கைக்கூலி அரசு அதிகாரிகளை மாற்றி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவர்களை இட மாற்றம் செய்தது மஹா மோசமான செயல். அதனால் அந்த இரு அதிகாரிகளும் அதே பொறுப்பிற்கு மீண்டும் ரீட்ரான்ஸ்பர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதை பெரிய பிரச்சினையாக மாற்ற பாஜகவினால் முடியும். Who is ஈவெரா ?செந்தமிழ் நாடென்னும் போதினிலே வெங்காயம் பாயுது காதினிலே என்று பேசிய தமிழ்நாட்டின் விரோதி தமிழின்‌, தமிழனின் எதிரி.

அனுமதி வாங்காமல் சிலை வைத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதனால் அதிகாரிகளை இதுபோன்று பழிவாங்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என H ராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்தில் பல்வேறு புகார்கள் காரணமாக வெளியேறிய ஜீவா போன்ற வெட்டி பயலுக ஆதாரம் இல்லாமல் போடும் வீடியோவிற்கு எல்லாம் தாசில்தார் மற்றும் DSP ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சத்தையும் ஆளும் அரசின் மீது அதிருப்தியையும் உண்டாக்குமே தவிர இனி சட்டம் ஒழுங்கை காப்பாற்றது என்று அடித்து கூறுகின்றனர் அரசு ஊழியர்கள்.