24 special

"போலீஸ் நாயே" என்றா சொன்ன... யாராவது அரசியல் அழுத்தம் கொடுத்தா உடனே சொல்லுங்க...செம்ம டென்ஷனில் டிஜிபி!

Sylendra babu
Sylendra babu

ஆரணியில் நடைபெற்ற சம்பவம் தமிழக காவல்துறை வரலாற்றில் கரும்புள்ளியாக பார்க்க படுகிறது, காவல்நிலையம் எதிரே சென்று காவல் நாயே வெளியே வாடா என எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு தமிழக காவல்துறை மீது மதிப்பு குறைந்து போய்விட்டதா? என பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசம் அடைந்தனர்.


ஏற்கனவே பாஜக தொடங்கி அதிமுக என பல அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாக குற்றம் சுமத்திவரும் வேலையில் நேற்று முன்தினம் காவல் நாயே என விசிக மாவட்ட செயலாளர் கோசம் போட்டு காவல்நிலையம் எதிரே ஊர்வலம் நடத்தியது அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது என பொதுமக்களே பேச தொடங்கினர்.

இதையடுத்து இந்த விவகாரம் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவிற்கு செல்ல உடனடியாக குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்யவேண்டும் என மாவட்ட காவல் கண்கணிப்பாளருக்கு உத்தரவு சென்று இருக்கிறது, முதல்வர் தரப்பிலும் அதற்கு பச்சை கொடி காட்ட உடனடியாக களத்தில் இறங்கியது திருவண்ணாமலை காவல்துறை.

தேட படும் நபர்கள் என விசிக மாவட்ட செயலாளர் அவரது சகோதர்கள் உள்ளிட்ட தலைமறைவான நபர்கள் பட்டியலை வெளியிட்டதோடு இல்லாமல் உடனடியாக ஊர்வலம் வந்த போது கோசம் போட்ட நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் துரிதமாக இறங்கியது காவல்துறை.

வழக்கமாக காவல் நிலையம் சென்று பேசும் விசிக மேல் மட்ட பொறுப்பாளர்கள் தொடங்கி இந்த விஷயத்தில் அமைதியாகி விட்டார்கள் அதற்கு முக்கிய காரணம் தமிழக டிஜிபி போட்ட அதிரடி உத்தரவுதான் என்று கூறப்படுகிறது, இந்த விவகாரத்தில் ஏதேனும் அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டால் உடனடியாக தனக்கு தெரிவிக்கும் படி சைலேந்திரபாபு உத்தரவு போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பல சிறுத்தைகள் பதுங்கி விட்டதாக கூறப்படுகிறது அக்கட்சியின் மேலிடமோ இந்த விவகாரத்தை தற்போது அமைதியாக கடக்க நினைக்கிறதாம் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் மற்றும் காவல்துறை இடையே உரசல்கள் உண்டாவது வழக்கம் ஆனால் எந்த அரசியல் கட்சியும் தற்போதைய சமூக வலைத்தளங்கள் பிரபலம் அடைந்த கால கட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களை காவல் நாயே என அழைத்தது கிடையாது இது ஒட்டுமொத்த இந்திய காவலர்களுக்கே விடப்பட்ட சவலாக தேசிய ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

இந்த சூழலில் தான் இந்த விவாகரத்தில் அதிரடியாக களத்தில் இறங்கி இருக்கிறது தமிழக காவல்துறை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.