24 special

நான் ஒரு MP..ஆனால் இந்தியில் பேச முடில...திமுக- வை எதிர்பாராத அளவில் தாக்கிய பாரிவேந்தர் பச்சமுத்து...!

Parivendar Pachamuthu , mk stalin
Parivendar Pachamuthu , mk stalin

திமுக கூட்டணியில் இடம்பெற்ற IJK கட்சி கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது, அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து நாடாளுமன்றம் சென்றார். இன்றும் திமுக மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் பாரிவேந்தர்.


இந்த சூழலில் பாரிவேந்தர் மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து இருவரும் நேற்றைய தினம் பேசிய பேச்சுக்கள் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, இனியும் விழித்து கொள்ளவில்லை என்றால் முகலாய ஆட்சியில் குடும்பம் குடும்பமாக அடிமை ஆட்சி நடந்தது போன்று தமிழகத்திலும் அதே சூழல் உண்டாகும் என நேரடியாக திமுகவை சாடி பேசி இருக்கிறார் பச்சமுத்து.

 சேலம்  கிழக்கு மாவட்ட  இந்திய  ஜனநாயக  கட்சி  சார்பில் வீரகனூரில்  நடைபெற்ற  பொதுக் கூட்டத்தில்   அக்கட்சியின் நிறுவனர்  பாரிவேந்தர் பேசியதாவது  50 ஆண்டுகள்  ஆண்ட ஆட்சியாளர்கள் என்ன  செய்தார்கள், தமிழத்தில்  நடைபெறுவது  ஜனநாயகமா? தனிக்குடும்ப  ஆட்சியா? என்றும் திமுக  ஆட்சி வந்தால் ஊழலோடு, கொள்ளை  நடைபெற்று வருகிறது.

அனைத்திற்கும்  வரி விதிக்கப்பட்டுள்ளது. வீட்டு  வரி  கட்டுவதற்காக  வீட்டை விற்க  வேண்டிய  நிலை, வரி வசூலிப்பது. மக்களுக்காக  அல்ல அதன் மூலம் லஞ்சம்  பெற்று  கொள்ளை  அடிக்கின்றனர். இதை  எல்லாம்  சிந்திக்க கூடாது என்பதற்காக  தான்  டாஸ்மார்க் கடையை நடத்துகின்றனர், தொடர்ந்து  திமுக,வை சேர்ந்த ஒரு  குடும்பமே  ஆள  வேண்டும்  என  நினைக்கின்றனர்,திராவிட  கட்சிகள் சுயமரியாதை என பேசி  வருகின்றனர். ஆனால்  பொங்கள் , தீபாவளி  உள்ளிட்ட  நாளில்  மக்கள்  கையேந்துகிறார்கள், அது  என்ன  திராவிட மாடல்  என்னவென்று தெரியவில்லை.

இந்தியை  யாரும்  திணிக்க வில்லை, பாராளுமன்ற  உறுப்பினரான  நான்  இந்தியில் பேச முடியவில்லை.  திமுகவினர்  நடத்துகிற  பள்ளியில்  இந்தி கற்பிக்கின்றனர். ஏழை ,எளிய  மக்களின்  படிப்பதற்காக  இந்தி  படிப்பது  அவசியம், இந்தி திணிப்பிற்கும், அறிவுரைக்கும்  வித்தியாசம்  உள்ளது என்றும் முகாலயர் ஆட்சி காலத்தில் மக்களை எப்படி அடிமை படுத்தி வைத்திருந்தார்களோ..

அதே போல் ஒரு குடும்பமே ஆட்சி நடத்தும் திமுக, அரசை அகற்ற வேண்டுமென பாரிவேந்தர் பேசியது திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அது என்ன திராவிட மாடல் என திமுக கூட்டணியில் இடம்பெற்ற தலைவர் ஒருவரே கேள்வி எழுப்பி இருப்பது என்ன இவர்களே இப்படி கேள்வி கேட்டு விட்டார்களே என திமுக தலைமை அதிர்ச்சி அடைந்து இருக்கிறதாம்.