Tamilnadu

இருக்கு ஆனா இல்லை கிழி கிழி என கிழித்து தொங்கவிட்ட வானதி சீனிவாசன் !

Vanathi srinivasan
Vanathi srinivasan

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நீட் தேர்வை முன்னிட்டு திமுக அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதி என்ன ஆச்சு என கேள்வி எழுப்பியதுடன் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு திமுக இரட்டை வேடம் போடுவதாக குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு நடைபெறாது என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது திமுக, ஆனால் திமுக ஆட்சி அமைந்த உடனேயே தற்போது நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது, மேலும் வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் எனவும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் திமுகவிற்கு தெரியும் எனவும் தேர்தலுக்கு முன்னர் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில் உதயநிதி சொன்னபடி ஏன் நீட் தேர்வை ரத்து செய்யமுடியவில்லை எனவும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர், இந்நிலையில் பாஜக தேசிய. மகளிர் அணி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி திமுக அரசாங்கத்தை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார், தாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்ற முடியாது என தெரிந்தும் வேண்டும் என்றே பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி, கேஎன் நேரு, மா சப்பிரமணியன் ஆகியோர் பேசியதை குறிப்பிட்டும் வெளுத்து எடுத்துள்ளார் வானதி சீனிவாசன், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இருக்கு ஆனா இல்லை என்ற காமெடி வசனம் மாதிரி நீட் தேர்வை வைத்து அரசியல் செய்த திமுகவிற்கு தற்போது அதே நீட் தேர்வு மூலமே எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது, நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி எப்போது வெளியிடுவார் என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்ப, திமுகவினரோ அமைதி காத்து வருகின்றனர்.