டெல்லியில் அதிரடி காட்டிய வானதி சீனிவாசன் அரங்கேறிய பரபரப்பு சம்பவம் !vanathi srinivsan in delhi
vanathi srinivsan in delhi

தெற்கு டெல்லியின் அன்சல் பிளாசாவில் அமைந்துள்ள இந்த உணவகம், புடவை அணிவதற்கு ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.  பெண்ணுக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.டெல்லியில் புடவை அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட உணவகம் இழுத்து மூடபட்டுள்ளது ஆண்ட்ரூஸ் கஞ்சில் உள்ள அன்சல் பிளாசாவில் அமைந்துள்ள அகிலா உணவகம், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் செயல்படுவதற்காக செப்டம்பர் 24 அன்று SDMC அதிகாரிகளால் மூடப்பட்ட அறிவிப்பை வெளியிட்டது. 

சேலை அணிந்ததால் உணவகத்தில் நுழைய அனுமதிக்கவில்லை என பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டார்,புடவையில் உள்ள தனது இரண்டு புகைபடங்களுடன், உணவக ஊழியர்களுடனான தனது வாதத்தின் ஒரு சிறிய வீடியோவையும் அவர் வெளியிட்டார்.  இது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிதார் புடவை இந்தியாவின் கலாச்சாரம் அதனை அனுமதி அளிக்காத நிர்வாகத்தை விமர்சனம் செய்தார்.அத்துடன் தேசிய மகளிர் ஆணைய தலைவருக்கு அவர் கடிதம் ஒன்றிணை எழுதினார் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார் இதையடடுத்து தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ) இந்த சம்பவத்தை விசாரிக்க டெல்லி காவல்துறையையும் கேட்டுக் கொண்டது.

செப்டம்பர் 21 அன்று பொது சுகாதார அலுவலர் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டார் இந்த அறிவிப்பில் பொது நிலத்தில் ஓட்டல் நிர்வாகம் ஆக்கிரமிப்பு இருப்பதாகக் கண்டறியபட்டது "பொது சுகாதார ஆய்வாளர் செப்டம்பர் 24 அன்று மீண்டும் அந்த இடத்தை ஆய்வு செய்தார் மற்றும் வர்த்தகம்  நிலையில் இயங்குவதை கண்டறிந்தார். இந்த அறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்திற்குள் வர்த்தகத்தை மூட உத்தரவிடப்படுகிறது, தவறினால் சீல் இல்லாமல் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் பொது சுகாதார துறை தெரிவித்தது.

இதையடுத்து தனது நட்சத்திர ஓட்டலை மூடுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார், வானதி சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் தலைநகர் டெல்லியில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி முழுமையான நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Share at :

Recent posts

View all posts

Reach out