
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திர மான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று திருச்சியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் பிற்பகல் 12.15 மணிக்கு வந்தார். அப்போது பிரதமர், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தார். அங்கிருந்து கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கலாச்சாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.
இதன் பின்னர் பிரதமர் மோடி கங்கை நதியின் புனித நீரை, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரகதீஸ்வரருக்குக் கொண்டு வந்ததன் மூலம், மாமன்னர் ராஜேந்திர சோழனின் போற்றுதலுக்குரிய மரபை, நமது பாரதப் பிரதமர் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார். வாரணாசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டிய மாமன்னர்ராஜேந்திர சோழனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை நினைவுபடுத்தியது மூலம், நமது பாரதப் பிரதமர் மோடி வரலாற்றில் திரும்ப செய்துள்ளார். .தமிழகத்தின் மகத்தான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பினைப் போற்றும், மற்றுமொரு உன்னதமான தருணம்
இதற்கிடையில் திராவிட கட்சிகளுக்கு பாடம் எடுத்துள்ளார் பிரதமர் மோடி. தேசமும் தேசதலைவர்கள் தான் முக்கியம் என தமிழ்நாட்டுக்கு நரேந்திர மோடியாக, 'வந்தார் வென்றார், நரேந்திர சோழனாக பிரம்மாண்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று நரேந்திர சோழனாக நமது பிரதமர் மோடி அறிவித்துள்ளது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கமாக, திராவிடர்கள் ஈவேரா , முன்னாள் முதல்வர்களுக்கு ஊர் ஊருக்கு சிலைகள் வைப்பது கட்டிடங்கள் திறப்பதை வழக்கமாய் கொண்டுள்ளார்கள். மேலும் ஸ்டிக்கர் ஓட்டுவது பேனா சிலை வைப்பது சமாதி அமைப்பது என செலவுகளை செய்வார்கள். தமிழை கீழ்த்தரமாக விமர்சித்த ஈவேராவுக்கு சிலை வைத்து கொண்டாடினார்கள் இதற்கெல்லாம் தற்போது முடிவுரை எழுதியுள்ளார் பிரதமர் மோடி.
ஆமாம் தமிழகத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ் மாமன்னர்களுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் எல்லாம் வருகிறதே என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் புருவம் உயர்த்தி பார்க்க வைத்துவிட்டார் பிரதமர் மோடி
இந்த 2025 ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் திராவிட ஒழிப்பில் புதிய மறுமவர்ச்சி ஏற்பட்ட உணர்வில் இருக்கிறது தமிழ்நாடு.! சாதாரணமாக சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் கூறினாலே , அது மிக பிரம்மாண்டமாகத் தான் இருக்கும், நாம் ஏற்கனவே டெல்லியில் அமைத்த டாக்டர் அம்பேத்கர் சிலை, ஐயா வாஜ்பாய் சிலை, ஹைதரபாத்தில் ராமானுஜர் சிலை, கேதர்நாத்தில் ஆதி சங்கரர் சிலை மற்றும் குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலைகளின் பிரம்மாண்டங்களை பார்த்துள்ளோம்..!
இப்ப மோடிஜியே தமிழ்நாட்டில், ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் என்றால், அதன் பிரம்மாண்டங்கள் இரண்டு மடங்காக இருக்கும்..! 'தமிழ் மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர்கள் புகழ் உலகெங்கும் எட்டுத் திசைக்கும் ஒலிக்கப் போகிறது, தமிழ்நாட்டுக்குள் உட்புகுந்த சில அழுக்குகள் கதறியே சாகப்போகிறது..!