
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (SCO Summit), பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இடையிலான சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநாட்டிற்குப் பிறகு, இரு தலைவர்களும் ஒரே காரில் பயணம் செய்து, கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆழமான உரையாடலில் ஈடுபட்டது, ரஷ்யா இந்தியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அழுத்தமாக சொல்லியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தை பகிரங்கமாகக் கண்டித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பின் ஒவ்வொரு அசைவும் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை SCO மாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து இந்தியா ரஷியா இருதரப்பு சந்திப்புக்கான இடத்திற்குச் செல்லும்போது, பிரதமர் மோடியுடன் காரில் பயணிக்க ரஷ்ய அதிபர் புதின் விரும்பியுள்ளார். அதற்காக சுமார் 10 நிமிடங்கள் பிரதமர் மோடிக்காகக் காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் இரு தலைவர்களும் அவரது காரில் ஒன்றாகப் பயணம் செய்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாடினர். இருதரப்பு சந்திப்பு நடைபெறும் இடத்தை அடைந்த பிறகும், அவர்கள் காரில் மேலும் 45 நிமிடங்கள் செலவிட்டனர். இதற்குப் பிறகு, இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முழு இருதரப்பு சந்திப்பை நடத்தினர் என்று கூறப்படுகிறது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருதரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதை உறுதி படுத்தும் விதமாக பிரதமர் மோடி அமெரிக்கா விதித்துள்ள தடைகள் மற்றும் கண்டனங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளில் உள்ள நெருக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. SCO உச்சிமாநாட்டின் நிகழ்வுகளுக்குப் பிறகு, நானும் அதிபர் புதினும் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு ஒன்றாகப் பயணித்தோம். அவருடனான உரையாடல்கள் எப்போதும் ஆழமான புரிதலைத் தருபவை, என்று பிரதமர் மோடி X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, புதின் உடனான புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் அதிபர் புடின் உக்ரைன் அமைதி முயற்சிகளில் இந்தியாவின் பங்கு குறித்து பேசினார். "உக்ரைனில் உள்ள நெருக்கடியைத் தீர்க்க சீனா மற்றும் இந்தியாவின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்" என்று புதின் கூறியது அமெரிக்கா காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றிவிட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தியா தேவையான முயற்சிகளை எடுக்கவும், ஷாங்காய் மாநாட்டின் இடையே ரஷ்யா மற்றும் பிற தலைவர்களுக்கு சரியான சமிக்ஞையை அனுப்பவும் தயாராக உள்ளது நன்றி என குறிப்பிட்டு இருந்தார். விரைவில் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
அதே போல் :உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.இதனிடையே தான் புதினும் உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கு குறித்து பேசியது டிரம்ப்க்கு மிகப்பெரும் அடியை கொடுத்துள்ளது. எனவே இந்தியாவில் வைத்து ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என உலக நாடுகள் தெரிவிக்கிறது. அவ்வாறு நடந்தால் புதிய வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்.
மேலும் பிரதமர் மோடிக்காக காத்திருந்த அதிபர் புதினின் செயல், உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கு,மேற்குலக நாடுகளை சாடியது எல்லாம் இந்தியாவிற்காக தான் என தகவல்கள் வெளியாகி உள்ளது அமெரிக்காவின் கடும் வரி விதிப்பு மற்றும் அபராதத்திற்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.