
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தார். குறிப்பாக, உலக வர்த்தகத்தில் “அமெரிக்கா முன்னிலை வகிக்க வேண்டும்” என்ற நோக்கில் பல்வேறு நாடுகளுக்கு வரிகளை அதிகரித்தார்.
இந்த வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். அதோடு, 60க்கும் மேற்பட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கும் அதிக வரிகளை விதித்தார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போரை “இந்தியா தூண்டுகிறது” என குற்றம்சாட்டிய டிரம்ப், இந்தியாவை குறிவைத்து கூடுதல் வரிகளையும் அறிவித்தார்.
ஆனால் இந்த வரி நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கே பெரும் சுமையாக மாறியது. பல்வேறு பொருட்களின் விலைகள் உயரும் நிலை ஏற்பட்டது. ஆயுத ஏற்றுமதியும், டெக் துறையும் தவிர அமெரிக்காவின் உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதால், உலக நாடுகள் அமெரிக்காவை விட்டு விலகி தங்களுக்குள் புதிய வர்த்தக பாதைகளைத் தேடத் தொடங்கின. குறிப்பாக, அமெரிக்க டாலர் வாணிகத்தில் அதிக விலை செலுத்த வேண்டிய சூழல் உருவானதால், பல நாடுகள் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளுடன் நேரடி வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தன.
உலக வல்லரசு என்ற முகத்தை காட்ட அமெரிக்கா, எல்லை பிரச்சினை கொண்ட நாடுகளை தூண்டி ஆயுதங்களை விற்கும் பழைய யுக்தியை பயன்படுத்தியது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி போரை நீட்டித்தது. ஆனால் ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நிலை குலைந்து போனது. ரஷ்யா, அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழித்ததுடன், பல நாடுகள் அமெரிக்க ஆயுதங்களை வாங்க விருப்பம் காட்டவில்லை. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டது.
இந்த தோல்விக்குப் பின்னால் இந்தியா இருக்கிறது என டிரம்ப் எண்ணி, இந்தியாவுக்கு கடுமையான வரிகளை விதித்து அழுத்தம் கொடுக்க முயன்றார். ஆனால், எதிர்பார்த்த விளைவு எதுவும் கிடைக்காமல், அமெரிக்காவில் விலைவாசி உயர்வு வேகமடைந்தது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவில் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்து உள்ளது இதனை தொடர்ந்து வழக்கும் போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், டிரம்ப் வரிகளை விதிப்பதன் மூலம் தனது அதிகாரத்தை மீறியதாகவும், அதன் மூலம் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதில்பயன்படுத்தி வருகிறார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலையின் போது அதிபருக்கு பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அதிகாரங்களில் வெளிப்படையாக வரிகளை விதிப்பது அல்லது இதுபோன்ற பரஸ்பர வரிகளை விதிப்பது ஆகியவை அடங்காது என்று நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. அதேநேரம், உச்சநீதிமன்றத்தினை அணுக ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், தற்போதைய சூழலில் வரிகள் ஏதும் ரத்து செய்யப்படாது.
இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை, ரஷ்யாவுடனான நெருக்கம், உக்ரைன் போரில் அமெரிக்காவை எதிர்கொண்ட நிலை ஆகியவை, உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளன. ரஷ்ய அதிபர் புதின் "உலக வல்லரசின்" முகமாக மீண்டும் தோன்ற, அமெரிக்கா பின்தள்ளப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.