
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினந்தோறும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ முருகனின் அருளைப்பெற பல மணிநேரம் வரிசையில் காத்து முருகனின் அருளை பெற்று வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் முதலில் பார்க்கும் ஒன்று அதிகாரிகளின், அராஜகம். கோவில் நிர்வாகத்தின் பெயரில் நடைபெறும் பணப்புழக்கம், முருகனை காண விரைவில் காண மறைமுக வசூல்…என திருச்செந்தூர் நிர்வாகம் அடாவடியில் இறங்கி இருப்பதை திமுக அரசு மற்றும் அதன் இந்து அறநிலையத் துறை வேடிக்கை பார்க்கிறது என்பதுதான் பக்தர்களின் கொந்தளிப்பு.
அதிகாலை நடைபெறும் விஸ்வரூப தீபாராதனை அதில் பங்கேற்க வரிசையில் நின்று காத்திருக்கும் சாதாரண பக்தர்கள் ஒருபுறம்; பணம் படைத்தவர்கள் மறுபுறம். வெளியில் டிக்கெட் இல்லை என்றாலும், உள்ளே சிலரின் கைகளில் ரூ.2000 லஞ்சம் கொடுத்தால் போனால், நேரடி அனுமதி. இதை யார் நடத்துகிறார்கள்? கோவிலின் சில ஐயர்களும், நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்களும். இது எல்லாம் கோவிலைப் பார்வையிடும் திமுக அரசின் அறநிலையத் துறைக்கு தெரியுமா தெரியாதா..
அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்ததாக கூறப்படும் பால் வழங்கும் திட்டமும் காகிதத்தில் மட்டுமே செழித்து வருகிறது என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிகாலை இருநூறு லிட்டர் பால் காய்ச்சப்படுகிறதாம் ஆனால் அந்தப் பால் எங்கே செல்கிறது? யார் பெற்றுக்கொள்கிறார்கள்? அந்த அளவுக்கு பச்சிளம் குழந்தைகள் வருகிறார்களா? இதற்கான கணக்கு கேட்க திமுக அரசு முன் வருமா? என்று பக்தர்கள் ஏக்கத்துடன் கேட்கிறார்கள்.
பொது தரிசன வரிசையில் மணிநேரங்களாக நின்றுகொண்டிருக்கும் பக்தர்களுக்கு தண்ணீர் கூட இல்லாத நிலை. பாதுகாப்பு காவலர்கள் எமர்ஜென்சி கேட்களில் இல்லை. ஒருவர் மயங்கி விழுந்தபோது கூட கதவைத் திறக்க யாரும் இல்லாத அவலம். கோவிலுக்காக அனுப்பப்பட்ட நாற்பத்தஞ்சு காவலர்கள் எங்கே? அவர்கள் பக்தர்களின் பாதுகாப்புக்கா? அல்லது நிர்வாகத்தின் வசதி செய்வதற்கா? இந்த கேள்விகளுக்கு திமுக அரசு மட்டும் அல்லாமல், உள்ளூர் அதிகாரிகளும் செவி மூடி நிற்பதாக குற்றச்சாட்டு கொழுந்து விட்டு எரிகிறது.
சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களுக்கு அளிக்கப்படும் ‘அரச மரியாதை’ சால்வை, பிரசாதம், VIP அனுமதி — எல்லாமே நிம்மதியாக ஓடுகிறது.. கோவிலுக்குள் ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்ட அசிங்கங்கள் நடந்தாலும், திமுக அரசு தலைகுனிந்து மவுனமாக நிற்பது பக்தர்களுக்கு இன்னொரு கேள்வியை எழுப்புகிறது:
இது இந்து கோவிலா? அல்லது வருவாய் ஏட்டாகி விட்ட தொழில் மையமா?பணம் இருந்தால் ‘பத்து நடக்கும்’ என்று பக்தர்கள் பொங்கிப் பேசும் அளவுக்கு சூழ்நிலை மோசமடைந்து விட்டதால், கோவில் நிர்வாகம் மற்றும் மாநில அரசு கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகின்றன. கோவில் ஆன்மீக தலமா? இல்லையா திமுக ஆட்சியில் ‘தரிசனத்தை கூட விற்கும்’ சந்தையானா? என்பது இன்றைய திருச்செந்தூரின் கசப்பான உண்மை என்று பக்தர்கள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் பொது தரிசன வழியில் 4 மணி நேரத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டு, சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் அங்கு வந்த சேகர்பாபு நோக்கி ‘இங்கே குடிப்பதற்கு குடிநீர் இல்லை. சுவாமியைப் பார்க்க முடியவில்லை. வெளியே போகவும் முடியவில்லை. இருபுறமும் கூட்டமாக இருக்கிறது. குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்படுகிறோம்'’ என குரல் எழுப்பினர்.
அப்போது, அமைச்சர் சேகர்பாபு தனது அருகில் இருந்தவர்களிடம், "திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருப்பான், அது கணக்கு கிடையாது’’ என அதிகார குரலில் பேசி நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
