24 special

பக்கத்துல இருப்பவங்க பாத்து இருங்க .. அடித்து நொறுக்க வந்தது அப்பாச்சி! அண்டை நாடுகளை மிரளவிட்ட இந்தியா! பவரை காட்டிய பாரதம்!

PMMODI,AH-64EAPACHE
PMMODI,AH-64EAPACHE

இந்தியா தனது ராணுவ பலத்தினை அதிகரித்து வருகிறது. ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதிலும் வாங்குவதிலும்  தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப அதிநவீன ஆயுதங்களைத் தனது பாதுகாப்புப் படையில் சேர்த்து வருகிறது, இந்த நிலையில் உலகத்தின் மிக சிறந்த ராணுவ ஹெலிகாப்டர் என கூறப்படும் அமெரிக்க ராணுவம் இயக்கி வரும் அப்பாச்சி ஹெலிகாப்டரை வாங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு, போயிங் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


உலகின் மிகவும் மேம்பட்ட, அதிநவீன வசதிகளைக் கொண்ட பல ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது, AH-64E  அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அதிகளவில் இந்த ரக ஹெலிகாப்டர்களைதான் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஹெலிகாப்டர்களை வாங்கி, இந்திய ராணுவத்தை மேலும் வலிமைப்படுத்த முடிவெடுத்தது இந்தியா. 

அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களில் 2 பேர் செல்ல முடியும். இதன் மொத்த எடை தாங்கும் திறன் 10,432 கிலோ ஆகும்.ட்ரோன்களை கட்டுப்படுத்த திறன் கொண்டதாக இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதில் T700-GE-701D என்ஜின்கள் உள்ளன.ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்

தாக்குதலுக்கு மட்டுமின்றி, உளவு, பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும். இரவு நேரத்திலும் திறம்பட செயல்படும் நேவிகேசன் அமைப்பு உள்ளது.இந்த ஹெலிகாப்டரில் உள்ள தொழில் நுட்பங்கள் எந்த தட்ப வெப்பநிலையிலும் துல்லியமான தகவல்களை வழங்க கூடிய வகையில் உள்ளன.

இந்த ஹெலிகாப்டர்களை போர்க்களத்தில் பல முனை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும். ராணுவத்தின் நிலம், கடல், வான்வெளி, விண்வெளி மற்றும் சைபர் தலங்களில் குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கு ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.இந்த ஹெலிகாப்டர், ஆன்-போர்டு மற்றும் ஆஃப்-போர்டு சென்சார்கள், நீண்ட தூர ஆயுதங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கருவிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், இது முழுமையாக மேம்படுத்தப்பட்ட தாக்குதல் திறன்களுடன் செயல்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர்களை ஆளில்லா முறையிலும் இயக்க முடியும். இரண்டு மேம்பட்ட என்ஜின்களை கொண்டுள்ளது.அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில் பயணிப்பவர்களைப் பாதுகாக்க, பிரத்யேக கவச அமைப்புகள், உறுதியான வெளிப்புற அமைப்பு ஆகியவை உள்ளன. ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வது, தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல், எதிரிகள் மிக தொலைவில் இருந்தாலும் அவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கவும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களால் முடியும். அதற்கான பிரத்யேக சென்சார் அமைப்புகளை அவை கொண்டுள்ளன.இந்த ஹெலிகாப்டரால், தன்னை சுற்றிலுள்ள ரேடார், மற்ற ராணுவ வாகனங்கள், வான் பாதுகாப்பு கவச அமைப்புகளுடன் தொடர்பு கொள்ள முடியும். இதனால், ஒன்றிணைந்த தாக்குதலை நிகழ்த்துவது அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களுக்கு மிகவும் சுலபம்.

அமெரிக்கா ராணுவத்திடம் 1984 ஆம் ஆண்டு முதல் இந்த ஹெலிகாப்டர்கள் உள்ளன. அப்போது முதல் உலகின் பல்வேறு நாடுகளும் இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்கி வருகின்றன.அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டு இருப்பது, பாதுகாப்பு படையின் வலிமையை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது. இன்றைய தலைமுறைக்கு ஏற்ப மேம்பட்ட அம்சங்கள் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களைதான் இந்திய ராணுவம் தற்போது வாங்கியுள்ளது. இனி இந்தியாவைத் தொல்லை செய்ய வேண்டும் என எதிரி நாடுகள் நினைத்தால், ஒருமுறைக்கு இருமுறை தனது எண்ணத்தை அவை மறுபரிசீலனை செய்துகொள்வது நல்லது.