24 special

துர்கா ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் டாப் சீக்ரெட்! முதல்வராக உதயநிதி! ஸ்டாலினுக்கு ஷாக் தந்த ‘சர்வே’..! மொத்தமாக வெளிவந்தது!

MKSTALIN,UDHAYANIDHISTALIN
MKSTALIN,UDHAYANIDHISTALIN

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல் ஆளாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்திய அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்தாக தமிழகம் முழுவதும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.


சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கும் பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அமைச்சர் அமித்ஷா தரப்பில் ‘களத்தை ஆய்வு’ செய்வதற்காக ‘டீம்’கள் இறங்கி வேலைகளை பார்த்து வருகிறது. தமிழகத்தில்  , தமிழக சட்டமன்ற தேர்தல் நிலவரம் தொடர்பாக டெல்லிக்கு விரிவான ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. அதில், திமுக கூட்டணிக்கு 100 முதல் 115 வரையும் இடங்களும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு 90 முதல் 110 இடங்களும் 40 தொகுதிகள் இழுபறியில் இருக்கும் என்ற சர்வே ரிப்போட் கொடுத்துள்ளது.  கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. இது திமுக தலைவர்களை இந்த ரிப்போர்ட் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.ஏனென்றால்  தமிழக தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில்  தற்போதே பின்னோக்கி சென்று கொண்டிருந்தால் போக போக என்ன ஆகும் என தீவிர ஆலோசனையில் இருக்கிறதாம் 

அப்படியே, இந்த ரிப்போர்ட் விவரங்கள்,கோபாலபுர மாப்பிள்ளைக்கும்  வந்து சேர்ந்துள்ளது.. இந்த ரிப்போர்ட்டை பார்த்தபடியே, “மீண்டும்  திமுக ஆட்சி தொடரமுடியதோ என தவித்தாராம் ஸ்டாலின். பாஜகவை விமர்சித்தும் மத ரீதியில் பேசியும் மொழி இனம் என பேச்செல்லாம் வீணாக போனது.  பாஜக அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என  உதயநிதி அரசியல் வாழ்க்கை என்ன ஆவது என யோசித்து வருகிறதாம் கோபாலபுரம். 

இதற்கு பின்னர்தான், உதயநிதியை எப்படி  முதல்வராக்குவது முதன்மைப்படுத்துவது அதற்கான வாய்ப்புகள் என்ன என அலசி ஆராய்ந்து வருகிறது. இதை செயல்படுத்தும் வகையில்  “கூட்டணி கட்சிகளுக்கு தூது விட்டுள்ளது கோபாலபுரம் உதயநிதியை முன்னிலைப்படுத்தி இனி  நிகழ்ச்சிகளை ஏற்பாடு  செய்ய ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாம் கோபாலபுரம்.  இனி அதிமுக குறித்தும் விமர்சிப்பது  உதயநிதியாகத்தான் தான் இருக்கவேண்டும் திமுகவின் கூட்டணி கட்சிகள் அதிமுக பாஜக குறித்து பேச கூடாது என அன்பு கட்டளையும் பிறப்பித்துள்ளதாம்.

இந்த நிலையில் தான் மமுதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க முத்து மறைந்தார். அதில் ஸ்டாலின் சற்று அதிர்ந்துதான் போனாராம். இதற்கிடையே தான் முக முத்து  மறைந்து ஓரிரு நாட்களில் ஸ்டாலின் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். முக முத்து மறைவு, ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி என கோபாலபுரம் சற்று பதட்டம் அடைந்த நிலையில் எந்தவித பதட்டமும் இல்லாமல் முதல்வரின் மனைவி அவரும் நானும் என்ற புத்தகத்தை வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது. ஆமாம் அது அரசு நிகழ்ச்சியாக இருந்திருந்தால் தள்ளி போடா முடியாது எனலாம் ஆனால் அது தனிப்பட்டவரின் நிகழ்ச்சி வீட்டில் ஒருவர் இறந்த நிலையில் நிகழ்ச்சியை தள்ளி வைக்காமல் உதயநிதியை வைத்து அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. 

உதயநிதியை முன்னிலைபடுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதா என்ற கேள்விகள்எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில்  துணை முதல்வர் உதயநிதியை பங்கேற்க வைக்கிறது கோபாலபுரக்குடும்பம். இதன் பின்னணியில் துர்கா ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கிறது.