
மேற்கு வங்க அரசியலில் இப்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை மொத்தமாக சரிந்து கொண்டிருக்கிறது. "மாற்றம் என்பது வெறும் தேர்தல் மேடைப் பேச்சில் இல்லை, அது அதிரடி செயலிலும் இருக்கிறது" என்பதை அங்கே புதிதாகப் பதவியேற்றுள்ள பாஜக அரசு மிக ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டியுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு, இத்தனை காலம் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் அத்தனை முறைகேடுகளையும் குறிவைத்து விசாரணையை முடுக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகால உள்ளாட்சி ஊழல்கள், கமிஷன் கொள்ளை எனப்படும் "கட் மணி" கலாச்சாரம், மிரட்டல் வசூல், சட்டவிரோத ஒப்பந்தங்கள் என அத்தனையையும் நோக்கி அரசின் சட்டப் பிடி ராக்கெட் வேகத்தில் பாய்ந்து வருகிறது
இந்த நிலையில் பல்வேறு நகராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் திடீரென தங்களது பதவிகளைத் தூக்கி எறிந்து வருகிறார்கள் இதற்கு காரணம் ; தங்களை நோக்கி மிக வேகமாகப் பாயும் சட்டத்தின் பிடியைக் கண்டு ஏற்பட்ட பயம் தான் குறிப்பாக, பிட்ஹான்நகர் மாநகராட்சியில் ஊழல் புகாரில் முக்கிய திரிணாமுல் புள்ளிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த கட்சிக்கும் ‘அடுத்த டார்கெட் நாம்தான்’ என்ற நடுக்கத்தைக் கொடுத்துள்ளது. மம்தாவின் கோட்டை எனப்படும் டையமண்ட் ஹார்பர் பகுதிளில் விக்கெட்டுகள் வரிசையாகச் சரிந்து வருகிறது,
மேற்கு வங்க மண்ணில் இனி “சிண்டிகேட் ராஜ்ஜியம்” மற்றும் “கட் மணி கலாச்சாரம்” என்ற பேச்சுக்கே இடமில்லை, அதை வேரோடு ஒழிப்போம் என்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி விடுத்துள்ள வெளிப்படையான எச்சரிக்கை, இந்த ஆக்ஷனை மேலும் வேகப்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டு கால ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் அத்தனை முறைகேடுகளையும் முழுமையாகத் தோண்டித் துருவி வெளிக்கொண்டு வர பாஜக அரசு தீவிரமாக முடிவெடுத்துள்ளதால், மம்தா பானர்ஜியின் கூடாரம் ஒட்டுமொத்தமாக ஆடிப்போயுள்ளது. நிலைமை கையை மீறிப்போவதை உணர்ந்த மம்தா பானர்ஜி அவசர அவசரமாகக் கூட்டங்களைக் கூட்டி, கவுன்சிலர்களைச் சமாதானப்படுத்த முயன்றாலும் எந்தப் பலனும் இல்லை. கைதாகும் பயத்தில் இருக்கும் கவுன்சிலர்கள் மம்தாவின் பேச்சைக் கேட்கக்கூடத் தயாராக இல்லை.
எந்தளவுக்கு என்றால், மாநகராட்சி கூட்டங்களைக் கூட நடத்த முடியாமல் அடுத்தடுத்து ரத்து செய்யும் அளவுக்கு உட்கட்சி சிதைவு அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாகத் திகழ்ந்த திரிணாமுல் காங்கிரஸ், இன்று ஊழல் வழக்குகள், தொடர் கைதுகள், கூட்ட ராஜினாமாக்கள் மற்றும் உட்கட்சி கிளர்ச்சியால் நாலாபுறமும் நிலைகுலைந்து நிற்கிறது. இது வெறும் சாதாரண ராஜினாமா அலை அல்ல, மேற்கு வங்காள அரசியலில் இத்தனை காலம் இருந்த ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து, ஒரு புதிய அதிகார மாற்றமும் புதியதொரு அத்தியாயமும் தொடங்கிவிட்டதற்கான அசைக்க முடியாத சாட்சியம்!
