24 special

ISI ஏஜென்ட் இலங்கை தீவிரவாதி சென்னையில் ரகசிய விருந்து அவிழும் சர்வதேச சதியின் முடிச்சுகள் அமைச்சருக்கு விழும் ஆப்பு

VIJAY
VIJAY

தமிழக அரசியல் வட்டாரங்களை அதிரவைக்கும் ஒரு நிழல் உலகச் சதித் திட்டம் இரகசியமாக அரங்கேறியுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்ற கூட்டணிக் கட்சி அமைச்சர் ஒருவரை ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் சந்தித்து, தமிழகத்தில் வட்டி இல்லாத வங்கி முறையைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு மனு அளித்தனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஏதோ சிறுபான்மை நலனுக்கான சாதாரண கோரிக்கை மனு போலத்தான் சித்தரிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சந்திப்பைத் திட்டமிட்டவர்கள் டிஜிட்டல் முறையில் சிக்கிக்கொண்டார்கள்.  இது  குறித்து உளவுத்துறை தீவிர விசாரணையில் இறங்கி உள்ளார்கள் . 


சென்னையில் யாருக்கும் தெரியாமல் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசிய விருந்து ஒன்று நடந்துள்ளது. அதில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அந்த அமைச்சரும் பங்கேற்றிருந்தனர். ஆனால், அங்கு வந்திருந்த வெளிநாட்டு விருந்தினர்களை உற்று கவனித்தபோதுதான் உளவுத்துறைக்கு அசல் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அருகருகே அமர்ந்து புன்னகையுடன் உணவருந்திக் கொண்டிருந்த இருவர் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் ஒருவருக்கொருவர் கடுமையான பரம்பரை அரசியல் எதிரிகள். அப்படிப்பட்ட இரு துருவங்கள் தங்கள் நாட்டை விட்டு இரகசியமாகப் பயணித்து, சென்னையில் வந்து எப்படி ஒன்றாகக் கைகோர்த்தார்கள் என்கிற கேள்வி எழுந்தது.

இந்த இரு எதிரிகளையும் ஒரே மேஜையில் அமர வைத்த அந்த மூன்றாவது நபர் யார் என்று தேடியபோதுதான் பகீர் பின்னணி வெளிவந்தது. அந்த மூன்றாவது நபர், சர்வதேச அளவில் செயல்படும் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற ஒரு மாபெரும் அமைப்பின் உச்சபட்ச நிர்வாகி ஆவார். இவருக்குப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதுடன், இவர் சர்வதேசக் கண்காணிப்பு வளையத்திலும் இருப்பவர். இவரது உத்தரவுக்குக் கட்டுப்பட்டுத்தான் அந்த இரண்டு இலங்கை அரசியல்வாதிகளும் சென்னைக்கு வந்துள்ளனர். இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், அந்த இருவரில் ஒருவர் இலங்கையை உலுக்கிய கொடூரமான ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவித்தவர் என்பதுதான்.

ஒரு நாட்டின் குண்டுவெடிப்புச் சதிகாரர், அவருக்குப் பரம்பரை எதிரியான இன்னொருவர், இவர்கள் இருவரையும் ஆட்டிப்படைக்கும் பாகிஸ்தான் தொடர்பு கொண்ட நிழல் மனிதர் என அனைவரும் தமிழக அமைச்சரோடும் முக்கியப் பிரமுகர்களோடும் சென்னையில் கூடிப் பேசியதன் பின்னணியில் ஒரு மாஸ்டர் பிளான் உள்ளது. வளர்ச்சி, புதிய வங்கி முறை என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தமிழகத்தில் ஒரு மாபெரும் சர்வதேச சட்டவிரோத நிதி வலைப்பின்னலை உருவாக்குவதே திரைக்குப் பின்னால் இருக்கும் சக்திகளின் உண்மையான நோக்கம். முதல் அமைச்சர் தூய்மை சக்தி என சொன்னாலும்  அவரைச் சுற்றிப் பின்னப்படும் இந்தச் சதி வலை மிகவும் ஆபத்தானது. தற்போது மத்திய, மாநில உளவுத்துறைகளும், ரிசர்வ் வங்கியும் இந்த நிழல் உலகக் கூட்டணியைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.