Tamilnadu

இந்த மூன்றே டீம் தான் "மூன்றே பேரு" அனைத்திற்கும் காரணம்... அர்ஜூன்சம்பத் பரபரப்பு தகவல்

arjun sampath
arjun sampath

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் கைது சம்பவங்களின் பின்னணியில் திராவிட கழகம், கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் பின்னணியே காரணம் என அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை பின்வருமாறு :-


தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் காவல்துறை ஏவல் துறையாக மாறி இருக்கிறது. முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு மந்திரியாக இருந்தாலும் திராவிடர் கழகமும், கம்யூனிஸ சிந்தனையாளர்களும், விடுதலை சிறுத்தைகளும் தொடர்ந்து காவல்துறையை மிக தவறாக பயன் படுத்தி வருகின்றனர். இதற்கு உறுதுணையாக மு க ஸ்டாலின் இருந்து வருகிறார். 

ஈ.வெ.ரா குறித்த உண்மைகளை சொன்னதற்காக சீதையின் மைந்தன் என்கிற தக்ஷிணாமூர்த்தி கைது செய்யப்படுகிறார். திமுக குறித்து விமர்சனம் செய்ததற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப் படுகிறார். அண்ணா, ஈ.வெ.ரா குறித்த உண்மைகளை வெளியிட்ட காரணத்திற்காக கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்படுகிறார். பாஜக பிரமுகரும் இந்துத்துவ வாதியும் ஆன திரு கல்யாணராமன் அவர்கள் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார். இப்பொழுது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மபுரி செந்தில் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நள்ளிரவில் சட்டவிரோதமாக கல்யாணராமனை கைது செய்துள்ளார்கள்.

கல்யாணராமன் கைது விஷயத்தில் சில காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ள விதம், எந்த அளவுக்கு கல்யாணராமன் மீதும் இந்து இயக்க தலைவர்கள் மீதும் காழ்ப்புணர்ச்சி யோடு இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கல்யாணராமனை தரதரவென்று இழுத்து வருவதும் அவமரியாதையாக பேசுவதும் சட்டத்திற்கு உட்பட்டதா? என்பதை காவல்துறையில் உள்ள நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

மனித நேயம் இல்லாமல் மனித உரிமைகளை மீறும் வகையில் சிலர் செயல்பட்டுள்ளனர். காவல் துறையில் உள்ள ஒருசில திமுக விசுவாசிகள் ஒட்டுமொத்த தமிழக காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். கல்யாணராமன் கைதின் போது பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அன்பு சகோதரி சுமதி அவர்களிடம் சில அதிகாரிகள் பேசிய விதம் சுமதி அவர்களை தள்ளி விட முயற்சி செய்தது ஒரு பெண் என்றும் பாராமல் அவரை அடாவடியாக நடத்தியது இதெல்லாம் மிகப்பெரிய அராஜகம்‌, இப்படி நடந்து கொண்ட காவல்துறையினர் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். 

கல்யாணராமன் கைது விஷயத்தில் தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். பாஜக மாநில செயலாளர் சுமதி அவர்களை தள்ளிவிட்ட அவமரியாதையாக பேசிய அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து மனித உரிமைகள் ஆணையம், பெண்கள் ஆணையம் ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழகம் முழுக்க இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் கல்யாணராமன் கைது என்பது முழுக்க முழுக்க தர்மபுரி செந்தில் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் அழுத்தம் காரணமாக மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மிகக்கேவலமாக பேசுகின்ற டாக்டர் சர்மிளி, சுந்தரவல்லி மற்றும் விசிக தலைவர் வன்னியரசு ஆகியோர் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கற்பிக்கும் வகையில் அவமரியாதையாக இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்கள். 

மோடி குறித்து அவமரியாதையாக பேசுபவர்கள் மீது தக்க பதில் கொடுத்த கல்யாணராமனை கைது செய்வது மிகவும் தவறான ஒன்று. இதற்காக இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுக்க போராட்டம் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறது.பாஜக மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் இந்து மக்கள் கட்சி தெரிவிக்கின்றது. கல்யாணராமன் மற்றும் சுமதி ஆகியோரது தரப்பு நியாயத்தை அண்ணாமலை ஏற்றுள்ளார். திமுக சார்பு ஊடகங்களை எச்சரிக்கை செய்துள்ளார். இது விஷயத்தில் அண்ணாமலை அவர்களுக்கு முழு ஆதரவு தெரிவித்து அவரது கரத்தை வலுப்படுத்துவோம். 

தமிழகத்தில் திமுக நடத்துகின்ற அராஜக ஆட்சிக்கு எச்சரிக்கை செய்கின்றோம் காவல்துறையை திமுகவின் ஏவல் துறையாக மாற்றி இன்று இயக்க தொண்டர்களை நசுக்க நினைக்கின்ற திமுகவில் இருக்கும் அவர்களது கூட்டணி கட்சியினருக்கும் எச்சரிக்கை செய்கின்றோம். மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது விஷயத்தில் கவனம் கொடுத்து தவறாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். 

கல்யாணராமன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். சுமதி அவர்களை தள்ளி விட முயற்சி செய்து அவமரியாதையாக நடத்திய அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுக்க ஜனநாயகப் அறப்போராட்டங் களை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் அர்ஜுன் சம்பத்.