தமிழகத்தில் தொடர்ச்சியாக மக்களின் அறியாமை மூட நம்பிக்கையை எப்படி ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்து வருகிறோம் அந்த வகையில் மேலும் ஒரு வீடியோ முழுக்க முழுக்க நாடகத்தை மிஞ்சும் வகையில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது , சினிமா நடிகர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது வெள்ளை சட்டை பேண்ட் அணிந்த பாதிரியார் ஒருவர் .,
திறந்த மண்டபம் போன்ற ஒரு இடத்தில் பெண்கள் ஆண்கள் என பலருக்கும் பேய் ஓட்டுகிறார் , அதிலும் 10 ஆண்டுகள் பிடித்த மாந்திரீக பேயை டிஸ்யும் என்ற ஒரே வார்த்தையில் ஓட்டுவது எல்லாம் அரண்மனை படத்தை மிஞ்சும் அளவிற்கு காட்சிகள் இடப்பெற்ற அதிசயம் எனலாம் ,பெடோட்டுவது கூட ஒருவகையில் மக்களை திசை திருப்பும் செயல் என்று பொறுத்துக்கொண்டு இருந்தால் .,
அப்போதுதான் கதையில் ட்விஸ்ட் வருகிறது , கையில் தத்தி தத்தி ஊன்றுகோல் உதவியுடன் நடந்துவரும் ஒருவர் பாதிரியாரின் கையை பிடிக்கிறார் அடுத்த கணமே அவர் ஊன்றுகோல் தேவையில்லாமல் நடக்கவைக்கிறார் பாதிரியார் , அவரும் நொடி பொழுதில் காலில் வழியின்றி நடப்பது வடிவேலு காட்சிகளை மிஞ்சிய காமெடி ரகம் .
அட கதையில் அடுத்து என்ன ட்விஸ்ட் இருக்கிறதோ என ஆவலுடன் பார்வையாளர்கள் காத்திருக்க அடுத்த சாதனை செய்கிறார் திரைக்கதையின் நாயகன் பேண்ட் ஷர்ட் பாதிரியார் இரண்டு கால்களும் நடக்கமுடியாமல் வீல் சேரில் நடந்துவரும் பெண்மணியை அப்படியே தூக்கி நடக்க வைக்கிறார் ,அந்த பெண்மணியும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கால் வலியோடு நடப்பது போன்று முகத்தில் பாவனையை வெளிப்படுத்தியது வேற ரகம் .
இப்படி திரைப்பட பாணியில் பேயோட்டி ஒரு தரப்பை குஷிப்படுத்தி வந்த பாதிரியாருக்கு நெட்டிசன்கள் முறையான பதிலடியை கொடுத்துள்ளனர் , இவர் பேயோட்ட பய்னபடுத்திய பல நபர்கள் போலியானவர்கள் எனவும் அவர்களை பற்றிய குறிப்புகளை சேனலுக்கு கீழே பதிவிட ஆடிப்போய்விட்டார் பாதிரியார் உடனடியாக அனைத்து கமெண்ட்களையும் நீக்கிவிட்டு ,யாரும் கருத்து பதிவிட முடியாதவாறு தனது சானலில் கமெண்ட் ஆப்ஷனை ஆப் செய்துவிட்டார் .
அத்துடன் இப்போது பேயோட்டுவதை பற்றி எந்த வவீடியோவும் அவரது சானலில் பதிவேற்றப்படவில்லை நெட்டிசன்கள் மற்றும் நேர்மையான கிறிஸ்தவர்கள் சிலரே இது போன்ற விடீயோவிற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதால் பாதிரியார் திடீர் முடிவிற்கு காரணமாக கூறப்படுகிறது . நகைச்சுவை காட்சிகள் அரங்கேறிய வீடீயோவை பார்க்க கிளிக் செய்யவும் .