Cinema

சற்றுமுன் இளையராஜா கொடுத்த சவுக்கடி பதில்..! ராஜா ராஜாதான்..!

Modi and ilayaraja
Modi and ilayaraja

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட விவகாரத்தில் சிலர் இளையராஜாவை விமர்சனம் செய்து வந்தனர் மேலும் இளையராஜாவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர், இந்த சூழலில் தன்னுடைய கருத்தில் பின்வாங்க போவதில்லை என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.


புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது. இந்த புத்தகத்தின் முன்னுரையை இசையமைப்பாளர் இளையராஜா எழுதியிருக்கிறார். அதில், ``நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, பெண்களின் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி போன்றவற்றில் பிரதமர் மோடியின் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், அம்பேத்கரின் கருத்து சந்திக்கும் இடத்தையும் இந்தப் புத்தகம் ஆய்வு செய்ய முயன்றுள்ளது.

இந்தியாவில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போன்றவை உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. சமூகநீதியைப் பொறுத்தவரை பிரதமர் மோடி பல்வேறு சட்டங்களைச்செயல்படுத்தியிருக்கிறார். சமுகத்தில் பின்தங்கிய மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை அவர் உறுதிசெய்துள்ளார்"

மேலும், ``முஸ்லிம் பெண்களின் வாழ்வில் முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாகப் பிரதமர் பெரும் மாற்றத்தைச் செய்துள்ளார். மோடிக்கும் அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே ஏழ்மை, ஒடுக்குமுறைகளை அனுபவித்தவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளைக் கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இருவரும் ஒன்றுபடுவதை இந்தப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவின்படி புதிய இந்தியா எப்படிக் கட்டமைக்கப்படுகிறது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது" என்று முன்னுரை எழுதி இருந்தார், இந்த சூழலில் தனது தம்பி கங்கை அமரனிடம் இளையராஜா தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதில் பிரதமர் மோடி குறித்த என்னுடைய கருத்து அது அதில் இருந்து பின்வாங்க போவதில்லை மோடிக்கு ஓட்டு போடுங்கள் என நான் சொல்லவில்லை, மோடிக்கு ஒட்டு போடாதீர்கள் என எப்போதும் சொல்ல போவதில்லை, என்னை விமர்சனம் செய்பவர்களை நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இளையராஜா தனது கருத்தில் தெளிவாக இருப்பதும் எந்த விமர்சனத்திற்கும் அசராமல் தனது கருத்தை அவர் தெரிவித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.