24 special

சசிதரூர் சொன்ன முக்கிய இரண்டு விஷயம் மொத்தமாக மாறிய கேரளா இப்போ தெரிகிறதா விஷயம் கேரளா

PMMODI,RAHULGANDHI
PMMODI,RAHULGANDHI

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நட்பு நாடுகளிடம் விவரிக்க, அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் அடங்கிய குழுக்களை உருவாக்கியது மத்திய அரசு. இந்தக் குழுவில் இடம்பெற நான்கு எம்.பி-க்களின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு காங்கிரஸ் கட்சியிடம் மத்திய அரசு கேட்டது. அதன்படி, நான்கு எம்.பி-க்களின் பெயரை காங்கிரஸ் தலைமை பரிந்துரைக்க, அந்த நான்கு பேரை விட்டுவிட்டு, சசி தரூர் உட்பட வேறு நான்கு பேரைத் தேர்வுசெய்தது மத்திய அரசு!


`ஆபரேஷன் சிந்தூரை’ முன்வைத்து பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்துகொண்டிருந்த சசி தரூரை மத்திய அரசு தேர்வுசெய்ததை, காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை . ஆனால் பா.ஜ.க-வினரோ, ``ஐ.நா-வில் பணிபுரிந்த, வெளியுறவுத்துறை பற்றிய நல்ல புரிதலுள்ள சசி தரூரின் பெயரை காங்கிரஸ் தலைமை பரிந்துரைக்காதது ஏன்... நாட்டின்மீது அவர்களுக்கு அக்கறையே இல்லையா?’’ என்றெல்லாம் சரமாரியாகக் கேள்வியெழுப்பி தரூருக்காகக் குரல் கொடுத்தனர்.

இந்தச் சூழலில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் `ஆபரேஷன் சிந்தூர்’ குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார் சசி தரூர். அதில், `பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு, ஈடுபாடு ஆகியவை உலக அரங்கில் இந்தியாவுக்கான மிக முக்கியச் சொத்துகள்’ என்று புகழ்ந்து எழுதியிருந்தார் தரூர். காங்கிரஸ் கட்சி, மோடியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்க, தரூரின் இந்தக் கட்டுரை, கட்சிக்குள் பூகம்பத்தைக் கிளப்பியது. இந்தக் கட்டுரை, பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்திலும் பகிரப்பட்டது.

பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ``சசி தரூரின் இந்தக் கட்டுரை, ராகுல் காந்தியின் பொய்ப் பிரசாரங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை சசி தரூர் தனியாகச் சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் பரவியது. இதையடுத்து, ராஜாங்கரீதியான அரசு முறைப் பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றிருக்கிறார் தரூர். அங்கு, ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உட்பட பல அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

``வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற முறையில் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் சசி தரூர்’’ என்கிறது மத்திய அரசு வட்டாரம். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் சிலரோ, ``கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, பல விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறார் தரூர். அவர், அறிவிக்கப்படாத வெளியுறவுத்துறை அமைச்சரைப்போல மோடிக்காக அல்லும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறார்’’ என முணுமுணுக்கத் தொடங்கியது காங்கிரஸ் 

தரூரின் நகர்வுகளுக்குப் பின்னால், கேரள அரசியல் கணக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ``அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில், தன்னை முதல்வர் வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்பதில் தரூர் உறுதியாக இருக்கிறார்.  தரூரைக் கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் இருக்கிறார். இவர், ராகுல் காந்திக்கு மிக மிக நெருக்கமானவர்.தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசுமீது, கடும் அதிருப்தி நிலவிவருகிறது. 

நான்கு முறை திருவனந்தபுரத்தி லிருந்து எம்.பி-யாகத் தேர்வாகியிருக்கும் தரூர், சமூக வலைதளங்களில் தான் பதிவிடும் முற்போக்கான கருத்துகள் மூலம், கேரளா விலுள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய இளைஞர்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கிறார். நன்கு படித்தவர் என்ற பிம்பமும் கேரள இளைஞர்களிடம் தரூருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. நாயர் சமூக மக்களிடமும் அவருக்கு நல்ல செல்வாக்கிருப்பதால், கேரள அரசியலில் தனக்கான தனி இடத்தைப் பெறும் முயற்சியில் இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியிலுள்ள உட்கட்சிப்பூசலை வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. இது கேரளத் தேர்தலில் தங்களுக்கு உதவும் என்று பா.ஜ.க நம்புகிறது’’ என்கிறார்கள்.