24 special

அஜித் குமார் என்ன தீவிரவாதியா? 24 லாக் அப் டெத்... ரூ.50 லட்சம் பேரமா பேசுறீங்க! திமுக தலையில் பேரிடியை இறக்கிய நீதிமன்றம்!

AJITHKUMAR,MKSTALIN
AJITHKUMAR,MKSTALIN

காவல்துறை விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்திடம், ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட, அஜித்குமார் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும், காவல்துறையினர் அத்துமீறி தாக்கியதை உறுதி செய்துள்ளன. இந்நிலையில், அஜித்குமார் மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”ஊராட்சி தலைவரின் கணவரான திமுகவைச் சேர்ந்த சேங்கைமாறன் உயிரிழந்த இளைஞர் அஜித்தின் குடும்பத்திடம் பேரம் பேசியதாக” மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். அப்போது, “திமுகவைச் சேர்ந்த மகேந்திரன், திருப்புவனம் நகரச் செயலாளர் காளீஸ்வரன், மானமதுரை டிஎஸ்பியும் அஜித்தின் குடும்பத்திற்கு, 50 லட்ச ரூபாய் தருவாதாகவும், உடலை பிரச்னை செய்யாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும்” தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து, “மானமதுரை டிஎஸ்பியின் சிறப்பு படை தலைமை காவலர் கண்ணன் திருப்புவனம் வந்து அஜித்தை விசாரித்தது ஏன்? சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய திருப்புவனம் நீதித்துறை நடுவரை காவல்துறையினர் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்காதது ஏன்?” என சரமாரியாக கேள்விகளை எழுப்பிய வழக்கறிஞர், அஜித்குமார் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதை மறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வாதத்தை தொடர்ந்து பேசிய நீதிபதி, “சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யாமல், பணியிட மாற்றம் மட்டும் செய்தது ஏன்? ஏன் காவல் நிலையத்தில் வைத்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், ”நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு நண்பகல் 2.15 மணிக்குள் டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்”என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

அஜித்குமார் காவலராக பணியாற்றி வந்த கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த, நகை காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க அழைத்துச் சென்றபோது தான், அவரை காவல்துறையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் அஜித்குமார் தாக்கப்பட்டது உறுதியானதுமே, 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக காவல்துறை வாகன ஓட்டுனர் உட்பட 6 பேரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்ட்அனர். இந்நிலையில், ஆளும்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள் இணைந்து அஜித்குமார் மரணத்தை மறைக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் , “உயிரிழந்த அஜித் குமார் என்ன தீவிரவாதியா? சாதாரண வழக்கில் கைதானவரிடம் எந்தவிதமான ஆயுதமும் வைத்திருக்காத ஒருவரை அடித்து காவல்துறை கொலை செய்துள்ளதா? தமிழகத்தில் இதுவரை 24 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டுப்படுகிறதே? அதுதொடர்பான விவரம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து, “இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது. அதேநேரத்தில், மனுதாரர்கள் முறைப்படி மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று அனுமதி அளித்தனர்.இதனை தொடர்ந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அதிமுக சார்பில் மாரீஸ் குமார் மனுத்தாக்கல் செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது..