நாட்டை உலுக்கி ஒடிசா ரயில் விபத்து குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.. சதி திட்டம் காரணமாக இருக்கலாம் எனவும் லூப் லையனுக்கு மாற்றிய சம்பவத்தில் குளருப்படி இருந்ததும் கண்டறியப்பட்டு இருப்பதால் அதிரடி திருப்பங்கள் உண்டாகி இருக்கின்றன.
ஓடிஷா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹநாகா பஜார் ரயில்நிலையம் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கோர ரயில்விபத்து நடந்தது. முதலில், லுாப்லைனில் நிறுத்தப்பட்டிருந்தசரக்கு ரயில் மீது, கோரமண்டல்எக்ஸ்பிரஸ் மோதியதில், அதன் சில பெட்டிகள் கவிழ்ந்தன. அடுத்த சிலநிமிடங்களில், இந்த எக்ஸ்பிரஸின் பெட்டிகளும் அதே பாதையில் வந்த யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலும்மோதின. இந்த பயங்கரத்தில்275 பேர் பலியாயினர். 900க்குமேற்பட்டோர் காயமடைந்தனர்.விபத்து பகுதியை ஆய்வுசெய்த ரயில்வே வாரியஉறுப்பினர்கள், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். வாரியஉறுப்பினர் ஜெயா வர்மா சின்காகூறியதாவது வெள்ளிக்கிழமை இரவு,பஹநாகா பஜார் நிலைய பகுதியின்லுாப் லைனில், இரும்புத்தாது ஏற்றப்பட்டிருந்த ஒரு சரக்குரயில் நிறுத்தப்பட்டிருந்தது.
மெயின் லைனில் செல்ல, கோரஎக்ஸ்பிரஸுக்கும்மண்டல் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸுக்கும் பச்சை சிக்னல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.ஆனால், மெயின் லைனில்செல்ல வேண்டிய கோரமண்டல்எக்ஸ்பிரஸ்,சிக்னல் குளறுபடியால், லுாப் லைனுக்கு மாறி, சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது.இரும்பு தாது எடைஅதிகம் என்பதால், சரக்கு ரயில்தடம்புரளவில்லை. மணிக்கு 128கி.மீ. வேகத்தில் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள்தான் தடம்புரண்டு கவிழ்ந்துள்
இந்த பெட்டிகளில்இருந்தவர்கள்தான், அதிகமாகப்பலியாகியுள்ளனர் மற்றும்அதிகமாகக் காயமடைந்துள்ளனர்.இந்த நிலையில் ரயில்வே வாரியம் தெரிவித்த தகவலில்..ரயில்வே சிக்னல்கள் ‘இன்டர்லாக்கிங்’ முறையில் இயக்கப்படுகின்றன. பாயின்ட் இயந்திரம், இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட பிரச்சினையே ரயில் விபத்துக்கு மூலகாரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தண்டவாள பாயின்ட் இயந்திரத்தில் செய்யப்பட்டிருந்த மாற்றத்தால் இன்டர்லாக்கிங்கில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள்.இப்போதைக்கு விபத்து தொடர்பான முழுமையான விவரங்களை கூற முடியாது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே முழு விவரம் தெரியவரும். விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.இன்டர்லாக்கிங் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது. இது செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பம். இதில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை. வெளிநபர்கள் தண்டவாள பாயின்ட் இயந்திரத்தை சேதப்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தனர்.
இதன் மூலம் நாட்டை உலுக்கிய ரயில் விபத்து சதி திட்டமாக இருக்கலாம் என்ற தகவலால் மக்கள் மத்தியிலும் அதிர்ச்சி நிலவுகிறது ஏற்கனவே ரயில்களை மையமாக கொண்டு கேரளாவில் ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்டவை சில மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.