24 special

ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும் சம்பவம்... அதிமுக தலையில் விழும் இடி..!

Edappadi palanisamy, Stalin
Edappadi palanisamy, Stalin

தமிழகத்தில் முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் கடந்த 19ம் தேதி முடிந்தது, தேர்தல் முடிந்தாலும் தமிழகத்தில் அதனுடைய பரபரப்பு இன்னும் குறையவில்லை. அந்த வகையில், தேர்தல் முடிவுகள் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ளதால் முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசியலை புரட்டி போடும் அளவிற்கு நான்கு சம்பவம் நடக்க இருப்பதாக சில தகவல் பேசப்படுகிறது.


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது, இரண்டாம் கட்டமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முப்பு 88 தொகுதிகளில் நடந்து முடிந்தது இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை வாக்கு பதிவான சதவீதம் என்பது மிகவும் கடந்த தேர்தலை காட்டிலும் குறைவாகவே பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் முடிவுக்கள் ஜூன் நான்காம் தேதி வெளியாக உள்ளது. அதனை பிறகு தமிழகத்தில் நடக்கப்போகும் மாற்றம் குறித்த தகவல் வெளியாகவுள்ளது.

முதலாவதாக விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த வருடத்தில் இருந்து இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில் துணை முதல்வர் பதிவை கொடுக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், திமுக தலைமை அப்படி ஏதும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் கடுமையாக பணியாற்றியதாகவும் அவர் ஓய்வில்லாமல் பிரசாரம் செய்ததாகவும். அரசியல் நுணுக்கங்களை தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், துணை முதல்வராக்கி நிர்வாகத்தை அதிகாரப்பூர்வமாக கவனிக்கச் சொல்லலாமான்னு தோணுது என்று இன்னும் சில மூத்த தலைவர்கள் ஸ்டாலினிடம் பேசி உள்ளாராம். மேலும், 2026 சட்டசபை தேர்தலை கவனத்தில் கொடு இந்த மாற்றம் ஏற்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், உதயநிதி எந்த பக்குவமும் இல்லை அரசியலில் முதலில் பேச்சு திறன் வேண்டும் அது சுத்தமாக உதயநிதியிடம் இல்லை என்றும் அரசியல் கையாளும் திறம் இன்னும் அவருக்கு வரவில்லை என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.

இரண்டாவததாக, லோக்சபா தேர்தலோடு தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இரண்டு அல்லது மூன்று அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்படலமாம் காரணம், இந்த தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை என தலைமைக்கு தகவல் சென்றுள்ளதாம். ஏற்கெனவே, மாவட்ட செயலாளர்கள் உடனே காணொளி நடத்திய ஸ்டாலின் இது குறித்து விரிவாக பேசியிருந்தார். அதனால் இந்த மாற்றம் நிச்சயம் ஏற்படும் என கூறப்படுகிறது.

மூன்றாவதாக, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியை சார்ந்த முக்கிய தலைவர் ஒருவர் வேறு கட்சியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக சில தகவல் வந்துள்ளது. அவருடன் நிர்வாகிகளும் மற்ற மாவட்ட தலைவர்களும் விலகலாம் என கூறப்படுகிறது. இது திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் என தெரியவந்துள்ளது. 

கடைசியாக, அதிமுகவில் பல மாற்றங்களை எதிர்பாக்கலாமாம், அதிலும் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். லோக்சபா தேர்தல் முடிவில் அதிமுக தோல்வி பெற்றால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பல சிக்கல்கள் வரலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,. தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் மக்களவை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுவதற்கு பதிலாக கடமைக்கு பணியாற்றினார்கள் என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர்களுக்கு நிலுவையில் வழக்குகள் தலையை சுற்ற வைக்கலாம் என தெரிகிறது.  ஜூன் மாதத்தில் இருந்து தமிழக அரசியலில் பல திருப்பங்கள் எதிர்பார்க்கலாம் அது என்ன என்பது பொறுத்திருத்து பார்க்கலாம்.