24 special

முதல் அணியாக பிளே ஆப் தகுதியான RR..? `சஞ்சு'ம்மல் பாய்ஸ்யின் அதிரடி ஆட்டம்..!

Sanju, Kl Rahul
Sanju, Kl Rahul

ஐபிஎல் 2024ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி செமி பைனலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் தகுதி பெற்றிருக்கிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, மும்பை அணிக்கு பெரும் சிக்கலை கொடுத்து ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் போட்டி சென்னை அணி மற்றும் பெங்களூரு அணி இடையே தொடங்கியது. இதுவரை ஒவ்வொரு அணிகளும் தலா 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில், எந்த அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது பெங்களுரு அணி. இருப்பினும் இனி வரக்கூடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றால் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 'இந்த சீசனை பொறுத்தவரைக்கும் நாங்க அடி வாங்காத எரியாவே கிடையாது' என பவுளர்களின் கதி "அந்தோ பரிதாபம்" எனும் சொல்லும் அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளது.

இந்நிலையில், இந்த வருடம் ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சன் இருந்து வருகிறார். நடந்து முடிந்த 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இந்த அணி. நேற்று புள்ளி பட்டியலில் இருக்கும் ராஜஸ்தான் அணியும், மூன்றாவது இடத்தில இருந்த லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்க டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பில்டிங்கைத் தேர்வு செய்தார். 

முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் ஆரம்பத்தில் ஆமை போல் மெதுவாக தட்டி வியாடினாலும் 10 ஓவர்களுக்கு பிறகு முயல் வேகத்தில் ஸ்கொரை சேர்த்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பினர். ஒரு ஓவர் மீதம் இருக்கையில் வெற்றியை சூடியது சஞ்சுமல் பாய்ஸ்யின் ராஜஸ்தான் அணி. இந்த தோல்வியின் மூலம் லக்னோ அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் அணி வழக்கம் போல முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது, 

இந்த சூழ்நிலையில், இன்று சென்னையில் இரவு நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைஸ் அணியுடன் மோதுகிறது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்துக்கு செல்ல முடியும் இல்லையென்றால் பெங்களூரு அணியை போன்று வேடிக்கை பார்க்க வேண்டியது தான் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெருமையானால், சிஎஸ்கே ஆறாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் ராயல் அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் சென்னை மற்றும் மும்பை டீம் ரசிகர்கள் இந்த வருடம் பைனலில் பங்காளிகளை காண முடியுமா..? என ஏங்கி வருகின்றனர்...